விஜய் அந்த விஷயத்தை திட்டமிட்டே தவிர்க்கிறாரா ?.. தவெக விழா மெனு.. ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்!
சென்னை: சினிமாவில் இருந்து தமிழ்நாட்டில் அரசியலில் பலர் காலடி வைத்துள்ளனர். அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சரத்குமார், டி. ராஜேந்தர், சீமான் என பலர் அரசியலில் களம் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட் இணைப்பாக விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.
கல்வி விருது விழா, கட்சி துவக்க விழா, முதல் மாநாடு, இரண்டாம் ஆண்டு விழா என அடுத்தடுத்து பொது விழாக்களில் விஜய் எந்தவொரு தயக்கமும் இன்றி பங்கேற்றும் பேசியும் வருகிறார். விழாவுக்கு வருபவர்களுக்கு ருசியான விருந்தையும் வழங்கி வருகிறார்.

ஆனால், அசைவ உணவுகளை தொடர்ந்து தவிர்த்து வருகிறார் விஜய் என்கிற விமர்சனமும் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், அதுதொடர்பாக ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தவெக விழா உணவு மெனு: மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்று வருகிறது. பேனரில் கையெழுத்துப் போட்டு தவெக தலைவர் விஜய் கெட் அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார். வெஜ் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், கேரட் அல்வா, அடை பிரதமன், ஐஸ்க்ரீம் என ஒட்டுமொத்தமாக 21 ஐட்டங்களுடன் இன்றைய மெனு ரெடியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அசைவத்துக்கு அனுமதி இல்லையா?: "தவெக நிகழ்ச்சிகளில் திட்டமிட்டே தவிர்க்கப்படுகிறதா அசைவ உணவுகள்? தவெக கட்சி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி என அனைத்திலும் சைவம் மட்டுமே பரிமாறப்படுகிறது. இன்றைய இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிலும்.. சைவம்தான். மற்ற கட்சிகள் பெரும்பாலும் சைவம், அசைவம் என இரண்டையும் பரிமாறுவது வழக்கம்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரில் எத்தனை பேர் சைவம், எத்தனை பேர் அசைவ உணவை விரும்புகிறார்கள் எனும் பட்டியலை சில தினங்களுக்கு முன்பே தயார் செய்து விடுவார்கள். ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதாக பரபரப்பை கிளப்பிய காலத்தில்.. தனது ராகவேந்திரா மண்டபத்தில் மதுரை ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது 'உங்களுக்கு அசைவ உணவு போட ஆசை. ஆனால் இது சைவ மண்டபம்' எனக்கூறினார். பக்கத்தில் வேறு மண்டபம் அல்லது வேறு இடத்தை புக் செய்து அவர்களுக்கு அசைவ உணவு பரிமாறுவதில் என்ன பிரச்னை?

பல மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள், தொண்டர்களுக்கும் சைவம் மட்டுமே பரிமாறினார் ரஜினி. அப்போது இது சர்ச்சையை கிளப்பியது. அவரைப்போல.. விஜய்யும் பாஜகவின் உணவு முறையை பின்பற்றுவது போல இருக்கிறது.
தனது மேலிடத்து உணவுக்கொள்கையை தவெக தொண்டர்கள் மற்றும் ஊக்கத்தொகை பெற வரும் மாணவர்கள், பெற்றோர் மீது திணிக்கிறாரா விஜய்?
- ரவிவர்மன்.
அரசியல் விமர்சகர்." என்பவர் கேட்பதாக ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மகா சிவராத்திரி: இன்று மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், அசைவத்தை தவிர்த்திருக்கலாம் என சிலர் கமெண்ட் போட, இதற்கு முன்னரும் அவர் தவிர்த்தது ஏன்? என்கிற கேள்வியையும் ப்ளூ சட்டை மாறன் எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











