விஜயகாந்த்: வில்லு விஜய்யை வெளுத்த ப்ளூ சட்டை மாறன்.. காரில் இரங்கல் தெரிவித்த சூர்யாவை விடுவாரா?
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. அதற்காக நேற்றே தவெக தலைவர் விஜய்யை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், விஜய் இன்று நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
அண்ணாமலை, தமிழிசை சவுந்திரராஜன் என பாஜகவை சேர்ந்தவர்கள் வந்து நினைவஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் அங்கே நடைபெற்றதால் கோயம்பேடு மீண்டும் ஸ்தம்பிக்கும் அளவுக்கு இன்றும் கூட்டம் கூடியுள்ளது.

தவெக தலைவர் விஜய் வராததை வில்லு விஜய் அல்லு அர்ஜுனை காரணம் காட்டி எஸ்கேப்பாக முடியாது என ட்விட்டரில் சாடியிருந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது கடந்த ஆண்டு காரில் சென்றபடியே கேப்டனுக்கு இரங்கல் தெரிவித்த சூர்யா இந்த ஆண்டு எங்கே இருக்கிறார் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்.
விஜயகாந்த் செய்த உதவி: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்களுக்கு விஜயகாந்த் உதவி செய்திருக்கிறார். குறிப்பாக விஜய் மற்றும் சூர்யாவுக்கு அவர் நிறையவே செய்துள்ளார். செந்தூரப்பாண்டி தம்பி என விஜய்யின் போட்டோ மற்றும் நினைவு அஞ்சலி இடத்தில் சில தவெக தொண்டர்களால் பிடிக்கப்பட்டு இருந்தது. விஜயகாந்த் மறைந்த செய்தி அறிந்ததும் ஓடோடி வந்த விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. அதன் காரணமாக இன்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லையா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு பெரியண்ணா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்து உதவி செய்திருந்தார் விஜயகாந்த்.
ப்ளூ சட்டை மாறன் விளாசல்: " Memories: சென்ற வருடம் இதே நாளில் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு வெளிநாட்டில் இருந்த சூர்யா.. காரில் பயணித்தபடியே இரங்கல் தெரிவித்தார். இவருக்காக பெரியண்ணா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க மற்றும் அரசியல் கட்சித்தலைவர்.
காரில் ஏறும் முன்பு.. தான் தங்கிய இடத்தில் இருந்தோ அல்லது இறங்கிய பிறகு வேறிடத்தில் இருந்தோ இதை செய்திருக்கலாம். உலகிலேயே... காரில் சென்றபடி இரங்கல் வீடியோ போட்ட ஒரே பண்பாளர் இவர்தான். இதுபற்றி விமர்சனம் வந்தபோது.. எந்த விளக்கமும் தரவில்லை போல.
வேறு கட்சியை சேர்ந்த தலைவர் மறைந்திருந்தால்... இப்படி செய்ய ம" னது வருமா? இனி யாராக இருந்தாலும் இப்படியொரு உதாரணத்தை பின்பற்றாதீர்கள்." என விளாசியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











