Maamannan Review: ஒருத்தனும் உயிரோட இருக்க மாட்டான்.. மாமன்னன் படத்தை பங்கம் பண்ண ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், அழகம் பெருமாள், லால் மற்றும் விஜயகுமார் நடிப்பில் உருவான மாமன்னன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

படத்தை பார்த்த பலரும் முதல் பாதி சூப்பர் என்றும் இரண்டாம் பாதி சுமார் என விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கம் போல ப்ளூ சட்டை மாறன் தனது ஸ்டைலில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தை வச்சு செய்துள்ளார்.

Blue Sattai Maran blasts Mari Selvarajs Maamannan movie via his review

ப்ளூ சட்டை மாறன் மாமன்னன் விமர்சனம்: உதயநிதி ஸ்டாலின் கடைசி படம் என்று சொன்னாலும், இந்த படத்தில் அவர் ஹீரோ கிடையாது. டைட்டில் முதல் படத்தில் வரை வடிவேலு தான் ஹீரோ என ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடித்து விட்டார் ப்ளூ சட்டை மாறன்.

வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் மட்டுமே நன்றாக நடித்துள்ளனர் என்றும் மற்றபடி உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

ஃப்ர்ஸ்ட் ஹாஃப் சூப்பர்: சில படங்களுக்கு நக்கலாக விமர்சனம் கொடுப்பது போல இந்த படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை கொடுக்கவில்லை. சப்த நாடியும் அடங்கியது போலவே முழு விமர்சனமும் இருந்தது.

படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும் கிணற்றில் குளிக்கும் சிறுவர்களை கல்லால் அடிக்கும் பிளாஷ்பேக் காட்சியில் நம் மீதே கல் எறிந்தது போல செம த்ரில்லிங்காக காட்சி படமாக்கப்பட்டு இருந்தது. இடைவேளை காட்சியில் அப்பாவுக்காக உதயநிதி ஸ்டாலின் வெடித்து சிதறும் அந்த சீனிலேயே வில்லனை கொன்று இருந்தாலும் படம் சூப்பராக இருந்திருக்கும் என்றார்.

இரண்டாம் பாதி வேற படம்: ஆனால், அதை விட்டு விட்டு அப்படியே இயக்குநர் டிராக் மாறி இரண்டாம் பாதி முழுக்க வேறு ஒரு படத்தை எடுத்து வைத்து வழக்கம் போல எந்தளவுக்கு சொதப்ப முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பி விட்டார் என விளாசி உள்ளார்.

Blue Sattai Maran blasts Mari Selvarajs Maamannan movie via his review

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து விட்டு வந்த பின்னர் அந்த படத்தில் நடித்த கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரி முத்து, கதிரின் அப்பாவாக நடித்த தெருக்கூத்து கலைஞர் கதாபாத்திரம், கொலை செய்யும் வில்லன் தாத்தா கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் மனதில் நின்றது. ஆனால், இந்த படத்தில் அப்படி ஒன்றும் நிற்கவில்லை எனக் கூறியுள்ளார்.

நோக்கமே தப்பு: அம்பேத்கர், பெரியார் சொன்ன கருத்தையெல்லாம் கண்டுக் கொள்ளமால் சாதிய ரீதியில் நீ பாதிக்கப்பட்டாய் என்றால், உன்னை எதிர்ப்பவனுடன் சண்டை போடு என்பதை தான் மாரி செல்வராஜ் வலியுறுத்துகிறார். இந்தியாவில் 6000க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இப்படி ஒரு சாதியினர் இன்னொரு சாதியினர் உடன் சண்டை போட ஆரம்பித்தால், ஒருத்தனும் உயிரோட இருக்க மாட்டான் என மாரி செல்வராஜின் மாமன்னனை டோட்டலாக கழுவி ஊற்றி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X