பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. பாபா படத்தை கிழித்துத் தொங்க விட்ட ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: பாபா படம் நவீனமாக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், கிளைமேக்ஸ் காட்சி உள்ளிட்ட சில பல மாற்றங்களும் இடம்பெற்றுள்ளன.

புதிய படம் போலவே 4 மணி காட்சியெல்லாம் போட, ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி படத்தை கொட்டும் மழையிலும் ரசித்து கொண்டாடி தீர்த்து விட்டனர்.

ஆனால், அதே சமயம் பாபா ரீ ரிலீஸ் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் சோஷியல் மீடியாவில் வெறித்தனமாக டிரெண்டாகி வருகிறது.

5 மந்திரம் தான்

5 மந்திரம் தான்

பாபா படத்தில் 7 மந்திரங்கள் இடம்பெற்ற நிலையில், தற்போது வெளியாகி உள்ள ரீ ரிலிஸ் படத்தில் வெறும் 5 மந்திரங்கள் போதும் என தேவையில்லாத ரம்யா கிருஷ்ணனின் அந்த படையப்பா மொக்கை சீனை தூக்கிட்டாங்க என ஆரம்பமே அதிரடியாக பேசி ஸ்கோர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். மீம் கிரியேட்டர்களுக்கு செமத்தியான தீனி மாட்டிடுச்சு என்றும் வெளுத்து வாங்கி உள்ளார்.

எம்ஜிஆர் மாதிரி சிஎம் ஆகணும்னு

எம்ஜிஆர் மாதிரி சிஎம் ஆகணும்னு

எம்ஜிஆர் மாதிரி சிஎம் ஆகணும் ஆசை இருந்ததால் தான் பாபா படத்தையே ரஜினி எடுத்தார் என்றும் அலிபாபா படத்தின் காட்சியை போட்டு அவரும் மூடநம்பிக்கையில் மாட்டிக்கிட்டார் என ரஜினி பேசும் காட்சிகள் வேடிக்கையாக உள்ளது. அந்த படத்தில் அது ஒரு பாஸ்வேர்ட் மட்டும் தான். எம்ஜிஆர் எப்போதுமே மூடநம்பிக்கைக்கு துணை போனதில்லை என்றும் ரஜினி வேப்பிலையை வைத்து ஆடிக்கிட்டே சிஎம் ஆகலாம்னு எப்படி நினைத்தார் என கழுவி ஊற்றி உள்ளார்.

பருத்தி மூட்டை குடோன்லயே

பருத்தி மூட்டை குடோன்லயே

அப்பவே இந்த படம் தேறாது என ரசிகர்கள் ஃபிளாப் ஆக்கிய நிலையில், இப்போ சாமி படங்களை எடுத்து காந்தாரா போல கல்லா கட்டலாம் என நினைத்து ரஜினி ரிலீஸ் செய்துள்ளார் என்றும் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என பங்கமாக பாபாவையே பந்தாடியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

பெரியார் ஆக முடியாது

பெரியார் ஆக முடியாது

பெரியாரா இருந்தவரு ராஜாஜியா மாறிட்டாருன்னு ஒரு வசனம் வருது.. யார் வேண்டுமானாலும் ராஜாஜியா ஆகலாம். ஆனால், யாராலும் பெரியாரா ஆக முடியாது என ப்ளூ சட்டை மாறன் பாபா படம் வெறும் மூட நம்பிக்கைகளை மட்டுமே விதைக்கும் கூடாரமாக உள்ளது என்றும் ரசிகர்களுக்கு பிரயோஜனப்படும் வகையில் மட்டுமின்றி ரசிக்கும் அளவுக்கு கூட ஒன்றுமே இல்லை என கொளுத்திப் போட்டுள்ளார்.

சண்டைக்கு வந்த ரசிகர்கள்

சண்டைக்கு வந்த ரசிகர்கள்

பாபா படத்தை பிரித்து மேய்ந்து பெரிய விமர்சனமாக போட்டு துவைத்து தொங்கப்போட்டதை பார்த்து கடுப்பான ரஜினிகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ப்ளூ சட்டை மாறன் உடன் சண்டைப் போட்டு வருகின்றனர். ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 10ம் தேதி பாபா படம் புதிய தொழில்நுட்பத்துடன் ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு சில கரெக்‌ஷன்கள் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X