Blue Sattai Maran Custody Review: உப்புமா படம்.. கஸ்டடி படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த் சாமி, பிரியாமணி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 12ம் தேதி வெளியான கஸ்டடி திரைப்படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் அந்த படத்தை கழுவி ஊற்றி உள்ளார்.
அமீர் கான் உடன் இணைந்து பாலிவுட்டில் அறிமுகம் ஆகலாம் என ஆசை ஆசையாக சென்ற நாக சைதன்யாவுக்கு லால் சத்தா சிங் திரைப்படம் பெரிய பல்ப்பை கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து தமிழில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அறிமுகமாக நினைத்த நிலையிலும் நாக சைதன்யாவுக்கு செம அடி விழுந்து இருப்பதாக பல விமர்சகர்களும் படத்தை விளாசி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு கொடுத்துள்ள விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

உப்புமா படம்: நாக சைதன்யா கான்ஸ்டபிளாக நடித்துள்ள கஸ்டடி படத்தில் யாருக்கு என்ன அதிகாரம், யாருக்கு என்ன பவர் என்பதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் கண்ட மேனிக்கு எந்தவொரு லாஜிக்கும் பார்க்காமல் உப்புமா படத்தை கிண்டி வைத்துள்ளார் வெங்கட் பிரபு என க்ளீன் போல்டு செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
சிபிஐ அதிகாரியையும் சிபிஐ அதிகாரியால் தேடப்படும் குற்றவாளி அரவிந்த்சாமியையும் சந்தேகத்தின் பெயரில் அரெஸ்ட் செய்யும் கான்ஸ்டபிள் நாக சைதன்யா எஸ்பியாக வரும் சரத்குமார் அரவிந்த் சாமியை கோர்ட்டில் ஆஜர் படுத்த விடக் கூடாது என முயற்சி செய்வதை தெரிந்துக் கொண்டு பெங்களூரு கோர்ட்டில் அரவிந்த் சாமியை ஆஜர் படுத்த நாக சைதன்யா போராடுவது தான் இந்த படத்தின் கதை என்றார்.
பத்து பைசாவுக்கு கூட வெங்கட் பிரபு யோசிக்கல: 90களில் நடக்கும் படமாக எடுத்து வைக்கிறேன் என 90 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற படமாக எடுத்து வச்சிருக்காரு.. வெங்கட் பிரபு இந்த படத்துக்காக 10 பைசாவுக்கு கூட யோசிக்கவே இல்லை என வெளுத்து வாங்கி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

ராம்கி மிலிட்ரி ஆபிசராக வந்து பீரங்கி எல்லாம் எடுத்து சண்டைப் போட்டு காமெடி செய்கிறார். ஜீவா பிளாஷ்பேக்கில் வருகிறார். வந்து செத்துப் போகிறார். அவருக்கு ஒரு காதலி வேற, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள க்ரித்தி ஷெட்டியும் படத்துக்கு எந்தவொரு பயனையும் தரவில்லை.
இனிமேல் தமிழ் இயக்குநர்கள் யாராவது தெலுங்கு ஹீரோக்களை வைத்து படம் இயக்குகிறேன் என போனால் அப்போ இருக்கு வேட்டு என தனது விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் பங்கம் பண்ணி உள்ளார்.


Click it and Unblock the Notifications











