Blue Sattai Maran: ”பாஜக ஆதரவாளர் கங்கனா ரனாவத்தை சந்தித்தார் ரஜினி..” ப்ளூ சட்டை மாறன் அட்டாக்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்கு ரஜினி நேரில் சென்றிருந்தார்.

கங்கனாவுக்கு சூப்பர் ஸ்டார் மலர் கொத்துக் கொடுத்து வாழ்த்திய புகைப்படங்கள் வைரலாகின. இதனையடுத்து கங்கனாவை சந்தித்த ரஜினியை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

Blue Sattai Maran: Blue Sattai Maran attack that Rajinikanth met BJP supporter Kangana Ranaut

ரஜினியை அட்டாக் செய்த ப்ளூ சட்டை மாறன்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஏஎல் விஜய் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். மாதவன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. இந்தப் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு கங்கனா ரனாவத்துக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ரஜினி, கங்கனா ரனாவத் சந்தித்துக்கொண்ட போட்டோ வைரலாகின.

இந்த போட்டோவில் ரஜினிகாந்த் தலைவர் 170 பட கெட்டப்பில் இருக்கிறார். ஜெயிலரைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கங்கனா ரனாவத்தை சந்தித்த ரஜினியை ப்ளூ சட்டை மாறன் அட்டாக் செய்துள்ளார். ”பாஜக ஆதரவாளர் கங்கனா ரனவத்தை சந்தித்தார் ரஜினி” என்ற கேப்ஷனுடன் ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது.

சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருவேன் என சொல்லிக் கொண்டிருந்த ரஜினி, கடைசி நேரத்தில் அந்த முடிவில் இருந்து பின் சென்றார். இன்னொரு பக்கம் அவர் பாஜகவில் இணையலாம் எனவும் சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் வலுவில்லாத பாஜக, ரஜினியை தங்களது அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொள்ள திட்டம் போட்டதாக செய்திகள் வெளியாகின.

அதேபோல், ரஜினியும் பல நேரங்களில் பாஜகவுக்கு சாதகமாக தனது கருத்துகளை வெளியிட்டு வந்தார். முக்கியமாக ஜெயிலர் வெளியான போது, இமயமலையில் இருந்து அயோத்தி சென்ற ரஜினி, ராமர் கோயிலில் வழிபாடு செய்திருந்தார். மேலும் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தும் வணங்கினார். இந்த சம்பவம் தமிழ்நாட்டு ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அப்போது ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை பங்கமாக ட்ரோல் செய்திருந்தார். ரஜினியின் ஜெராக்ஸ் காப்பி போல செயல்படும் கங்கனா ரனாவத்தும் வெளிப்படையாகவே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இதனால் அவரது படங்கள் எதுவும் ரசிகர்களிடம் வரவேற்புப் பெறாமல் தியேட்டரை விட்டே ஓடுகின்றன. சமீபத்தில் வெளியான தேஜாஸ் திரைப்படமும் படு தோல்வியடைந்தது. இதனையெல்லாம் ட்ரோல் செய்யும் விதமாகவே பாஜக ஆதரவாளர் கங்கனா ரனவத்தை சந்தித்தார் ரஜினி என ப்ளூ சட்டை மாறன் அட்டாக் செய்துள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X