Blue Sattai Maran: "ரஜினிக்கு எந்நேரமும் விஜய் நினைப்பு தான்... அவ்ளோ பயமா..?” ப்ளூ சட்டை அட்டாக்!

சென்னை: லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், விஜய் குறித்தும் அவரது வளர்ச்சியை பற்றியும் மனம் திறந்து பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், விஜய் குறித்து ரஜினி பேசியதை ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்.

விஜய்யை பார்த்து ரஜினிக்கு பயம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் என்ட்ரி ரசிகர்களை தெறிக்கவிட்டது. இதனையடுத்து லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சும் செம்ம வைரலாகி வருகிறது.

 Blue Sattai Maran: Blue Sattai Maran Attack that Rajini is scared of Vijays growth

எப்போதும் தான் பட்ட கஷ்டங்களையும் அதனை கடந்து வந்த பாதைகளையும் பற்றியும் மட்டுமே மேடைகளில் பேசுவது ரஜினியின் ஸ்டைல். ஆனால், இந்த முறை விஜய்யை பற்றியும் ரஜினி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய்யை ஒருபோதும் நான் எனக்குப் போட்டியாக நினைக்கவில்லை. நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய், பல கஷ்டங்களை கடந்து இந்த உயரத்திற்கு வந்து நிற்பதாக பாராட்டினார்.

மேலும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தான் சொன்ன காக்கா, கழுகு கதை விஜய்க்காக சொன்னது போல சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டன. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை எனக் கூறியிருந்தார். ரஜினியின் இந்த விளக்கத்தை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார். இதுகுறித்து முதலில் ட்வீட் போட்டிருந்த ப்ளூ சட்டை மாறன், "காக்கா, கழுகு கதையை ஆரம்பிச்சதே நீங்கதான். பட்டத்தை பறிக்க நூறு பேருன்னு புலம்புனதும் நீங்கதான். உங்க படத்துக்கு நீங்கதான் போட்டி. ஏன்னா.. ரிலீஸ் டைம்ல மத்த படங்கள் போட்டி போட தியேட்டர் கெடச்சாத்தான? அப்படி ஒரு வாய்ப்பு வந்தப்ப பேட்ட வசூலை விஸ்வாசம் போட்டு தள்ளுனது எல்லாம் மறக்க முடியுமா?" என பங்கமாக கலாய்த்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ட்வீட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதில், விஜய்யின் வளர்ச்சியை பார்த்து ரஜினிக்கு பயம் வந்துவிட்டதாக அட்டாக் செய்துள்ளார். "ரஜினியை விட விஜய்யின் பட வியாபாரம் அதிகரித்து வந்ததால்.. இனி அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் பேச்சும் அடிபட்டது. அந்த பதட்டத்தில்தான் காக்கா, கழுகு கதை சொன்னார். ஐயய்யோ... பட்டத்தை பறிக்கறாங்க என்று குமுறினார்."

"இப்போது மீண்டும் விஜய் பற்றி பேசுகிறார். இதிலிருந்து தெளிவாக தெரிகிறது... இவருக்கு விஜய் என்றால் பயம் என்று. இவரைப்போல 25 வருடம் மாவு அரைத்துவிட்டு கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை விஜய். விரைவில் கட்சி ஆரம்பிக்கும் வேலையையும் துவங்கி விட்டார். எதிர்காலத்தில் விஜய்... தமிழகத்தில் ஆட்சியை பிடித்தால்... தலை சுற்றி கீழே விழுந்துவிடுவார் போல இவர். எந்நேரமும் விஜய் நினைப்புதானா? கூல் டவுன் சார்" என பங்கம் செய்துள்ளார்.

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவுக்குப் பின்னர் ரஜினியின் பேச்சை ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து கலாய்த்து வருவதால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X