Blue Sattai Maran: 'அந்த வீடியோ எப்படி வருதுன்னு மட்டும் பாரு..’ ரஜினி ரசிகருக்கு ப்ளூ சட்டை சவால்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியானது முதலே ரஜினியை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து வருகிறார்.
இதனால், ப்ளூ சட்டை மாறனை ரஜினி தனியே அழைத்து மீட்டிங் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் பகிரங்கமாக சவால் விட்டுள்ளார்.

வீடியோ எப்படி வருதுன்னு மட்டும் பாரு : நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் கடந்த வாரம் ரிலீஸானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் சில நெகட்டிவான விமர்சனங்களும் வெளியாகின. இதில் முக்கியமாக ப்ளூ சட்டை மாறனின் விமர்சனமும், ஜெயிலர் படம் குறித்த ட்ரோல் மீம்ஸ்களும் செம்ம வைரலாகின.
ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றியும் அதிகமாக ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இதனிடையே ரஜினியுடன் நடந்த மீட்டிங் குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள டிவிட்டர் பதிவு கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. அதாவது ஜெயிலர் படம் மீதான ப்ளூ சட்டை மாறனின் ட்ரோல்களை பார்த்த ரஜினி ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம். இதனால், தனது நண்பரும் சினிமா செய்தியாளருமான செய்யாறு வேலு மூலம் ப்ளூ சட்டை மாறனை தனியாக சந்திக்க அழைத்துள்ளார் ரஜினி.
இதுபற்றி செய்யாறு வேலு ப்ளூ சட்டை மாறனிடம் கூற, முதலில் அவர் முடியாது என மறுத்துள்ளார். பின்னர் சீனியர் நடிகரான ரஜினி அழைத்தும் போகாமல் இருக்க முடியாது என ப்ளூ சட்டை மாறன் ஓக்கே கூறியுள்ளார். அதோடு மீட்டிங்கை செல்போனில் ரெக்கார்ட் செய்யவும் அனுமதி கேட்டுள்ளார். ப்ளூசட்டை மாறனின் கோரிக்கைக்கு முதலில் மறுத்துவிட்ட ரஜினி, பின்னர் சில கண்டிஷன்களோடு சம்மதம் தெரிவித்தாராம்.
ஆனால், இந்த வீடியோவை வெளியே விடக்கூடாது என ப்ளூ சட்டை மாறனிடம் எழுதி வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த மீட்டிங்கில் சில கசப்பான அனுபவங்கள் கிடைத்ததால், தற்போது அந்த வீடியோவை 11 மணிக்கு வெளியிடுவேன் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் உட்பட திரையுலகமே என்ன வீடியோ, என்ன சம்பவம் என காத்திருந்தனர்.
இதற்கு கமெண்ட் செய்திருந்த ரஜினி ரசிகர் ஒருவர், '11 மணிக்குள்ள சுத்துபோட்டு மெரட்டிருவாங்க or சமாதானமா போய்டுவாங்க. இந்த வீடியோ ரிலீஸாகலாம் வாய்ப்பே இல்ல' எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ப்ளூ சட்டை மாறன், "நீதாம்ப்பா விஷயத்தை கரெக்ட்டா கேட்ச் பண்ணி இருக்க. அந்த வீடியோ எப்படி வருதுன்னு மட்டும் பாரு. அதுல ஹோட்டல், தலிவர் மற்றும் சோஷியல் மீடியான்ஸ் கூட நான் இருப்பேன். ஆனா... 'எந்த ரூபத்துல இருப்போம்'னு தெரிஞ்சிக்க 11 மணிவரை வைட் பண்ணு அப்பு. அப்பறம்.. சுத்து போட்டு மெரட்டுவாங்கன்னு சொன்ன பாரு. அதுதான் பெரிய தமாசு. இவனுங்க மெரட்டலுக்கு எல்லாம் பயந்தா... இங்க கடை போட முடியமா... போங்க தம்பி" என நக்கலாக பதில் கூறியிருந்தார்.
இந்நிலையில் 11 மணிக்கு வீடியோ வரும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு விபூதி அடித்துவிட்டார் ப்ளூ சட்டை மாறன். வடிவேலுவின் காமெடி வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்து நெட்டிசன்களை அப்செட் ஆக்கிவிட்டார். இதுகுறித்து பலரும் ப்ளூ சட்டை மாறனை கேள்வி எழுப்ப, அவரோ கண்டிப்பாக அந்த வீடியோவை வெளியிடுவேன் என மீண்டும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











