Blue Sattai: “அயோத்தியில் மட்டுமா ராமர் கோயில்..?” அன்றே சொன்ன தலைவர்: பாய்ண்ட்டை பிடித்த ப்ளூ சட்டை
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தை விடவும் அவர் உபி சென்றது வைரலாகியுள்ளது.
உபி முதலமைச்சர் யோகியின் காலில் விழுந்த ரஜினி, ராமர் கோயில் சென்று வழிபட்டதும் சர்ச்சையானது.

அப்போது அயோத்தி ராமரை தரிசிப்பதற்காக நான் பல வருடங்களாக காத்திருந்தேன் எனவும் ரஜினி கூறியிருந்தார்.
இதனையடுத்து ரஜினியை பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில்... அன்றே சொன்ன தலைவர்: ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும் முதல் வாரத்தில் நல்ல ஓபனிங் இருந்தது. இதனால், முதல் வாரம் 375 கோடி ரூபாய் வசூலித்த ஜெயிலர், இரண்டாவது வாரம் 150 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி மொத்தம் 550 கோடி ரூபாய் வரை வசூல் கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை விடவும் அவர் உபி சென்றது ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. இமயமலையில் இருந்து உபி சென்ற ரஜினி, அம்மாநில முதலமைச்சர் யோகியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். மேலும் அம்மாநில துணை முதலமைச்சர் கேஷ்வ் பிரசாத் மவுரியா உடன் ஜெயிலர் படம் பார்த்தார் ரஜினி.
இந்த சம்பவங்களின் போட்டோஸ், வீடியோக்களை ஷேர் செய்த நெட்டிசன்கள், ரஜினியை கடுமையாக ட்ரோல் செய்தனர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத ரஜினி உபியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் சென்று அங்கேயும் வழிபாடு செய்தார். அப்போது, "அயோத்தி ராமரை தரிசிப்பதற்காக நான் பல வருடங்களாக காத்திருந்தேன். இன்றுதான் எனது வேண்டுதல் பூர்த்தியானது. கடவுள் விரும்பினால் ராமர் கோயில் கட்டி முடித்த பின்னர் மீண்டும் வருவேன்" எனக் கூறியிருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராமர் கோயிலில் ரஜினி வழிபட்டதை ப்ளூ சட்டை மாறன் பாய்ண்ட் பிடித்து ட்ரோல் செய்து வருகிறார். ரஜினி தயாரிப்பில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் வள்ளி. ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த இந்தப் படம் சுமாராக ஓடியது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை தனது டிவிட்டரில் ஷேர் செய்து ரஜினியிடம் வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் வெளியான வள்ளி படத்தில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சிலர் பேசிக்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதாவது இந்து நாட்டில் இந்து கோயில்கள் தான் இருக்க வேண்டும் என்பதாக காட்சியை வைத்துள்ளார் ரஜினி. பின்னர் அவரே ஞானியாக வசனம் பேசுகிறார். அதில், "அயோத்தியில் மட்டும் ராமர் கோயிலையும் மசூதியையும் கட்டி என்னய்யா பிரயோஜனம். முதலில் ஒவ்வொருவரின் இதயத்தில் ராமர் கோயில், மசூதி கட்டி இந்தியன் என்ற உணர்வுடன் வாழுங்கள்" என கூறுகிறார்.
இந்த வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "ராமர் கோவில் குறித்து தலீவர் அன்று சொன்னது" என கேப்ஷன் கொடுத்து கலாய்த்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











