Blue Sattai Maran:"வேலை வெட்டி இல்லாம... இதெல்லாம் படமா..?” சிங்கப்பூர் சலூன் ப்ளூ சட்டை விமர்சனம்
சென்னை: ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். காமெடி ஜானரில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
இதெல்லாம் ஒரு படமா..?
ரேடியோ ஜாக்கியாக மக்களிடம் பிரபலமான ஆர்ஜே பாலாஜி, தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் நேற்று வெளியானது. இந்தப் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனம் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது. சிங்கப்பூர் சலூன் கதை மட்டும் இல்லாமல், ஆர்ஜே பாலாஜியின் நடிப்பையும் பங்கமாக கலாய்த்து வருகிறார்.

இந்தப் படத்தின் கதை பற்றி கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், சின்ன வயதிலே தனது ஊரில் உள்ள ஹேர் ஸ்டைலிஸ்ட் போல எதிர்காலத்தில் தானும் வர வேண்டும் என ஆசைப்படுகிறார் ஆர்ஜே பாலாஜி. அதற்கு சம்மதம் சொல்லும் ஆர்ஜே பாலாஜியின் அப்பா, அதற்கு முன்பு டிகிரி மட்டும் முடித்துவிட வேண்டும் என அட்வைஸ் செய்கிறாராம். அதனால் டிகிரி முடித்துவிட்டு அதன் பின்னர் சலூன் கடை திறக்கிறார் ஆர்ஜே பாலாஜி.
சலூன் திறந்துவிட்ட பிறகு அது சக்சஸ் ஆனதா... ஆர்ஜே பாலாஜி சாதித்தாரா என்பது தானே கதையாக இருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதியில் அதுபற்றி எதுவுமே இல்லை. அப்படியே படம் எங்கெல்லாமோ செல்கிறது... ஆர்ஜே பாலாஜியும் ஆளை மாற்றி மாற்றி காதலித்துக் கொண்டே இருக்கிறார். அதேபோல் ஆர்ஜே பாலாஜி சலூன் கடைக்கு வேலைக்கு செல்ல, இவரது வேலையை பார்த்து உடனே 50000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள்.
ஆனாலும் படத்தில் ஒரு காட்சியில் கூட ஆர்ஜே பாலாஜி முடி வெட்டுவதை போல சீனே இல்லை. ஹேர் கட்டிங் செய்வதை தவிர மற்ற எல்லாத்தையும் செஞ்சுட்டே இருக்காங்க. ஆர்ஜே பாலாஜி கடை திறந்த பின்னரும் இதே தான் நிலைமை. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா படம் இயக்கிய கோகுல் தான் இந்தப் படத்தை இயக்கினார் என்பதை நம்ப முடியவில்லை. ஒரு இடத்தில் கூட படம் ரசிக்கும் படி இல்லை.
சத்யராஜ் வரும் நான்கு ஐந்து காட்சிகளில் தான் கொஞ்சம் காமெடி இருந்தது. ஆனால், ஆர்ஜே பாலாஜிக்கு சுத்தமா நடிப்பே வரவில்லை. சினிமாவுக்கு வந்து இத்தன வருசம் ஆகியும் ஒரு சீனில் கூட உருப்படியா நடிக்க வரல.. அவர் முகத்தில் எந்த எமோஷனலும் இல்ல. ஆக மொத்தம் வேல வெட்டி இல்லாம நேரம் போகலைன்னு இப்படி ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பொளந்து கட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











