Blue Sattai Maran: சிவாஜி அப்பவே அப்படி... ரஜினி, கமலை மறைமுகமாக அட்டாக் செய்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: 1960ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிவாஜி கணேசன் உதவியதை சுட்டிக் காட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதன்மூலம் ரஜினி, கமலை அவர் மறைமுகமாக ட்ரோல் செய்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Blue Sattai Maran: Blue Sattai Maran pointed out Shivajis help to the people during the rains in Chennai

சிவாஜி அப்பவே அப்படி
கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெருமழை கொட்டித் தீர்த்தது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகியும் இப்போது வரை பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை என செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேநேரம் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மழையால் மின்சாரம் பாதிக்கப்பட்டு உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சென்னை வாழ் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தன்னார்வளர்கள் பலர் மக்களுக்கு உதவினாலும் திரை பிரபலங்கள் அமைதி காத்து வருவதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தார். முக்கியமாக ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் மக்களுக்கு உதவவில்லை என பொதுவான விமர்சனங்கள் எழுந்தன.

சூர்யா, கார்த்தி இருவரும் வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கினர். அதேபோல், ஹரிஷ் கல்யாண், ஆதி, நிக்கி கல்ராணி, KPY பாலா உட்பட இளம் நடிகர்கள் சிலர் தங்களாலான உதவிகளை செய்தனர். அதேநேரம் வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான், விஷ்ணு விஷால் இருவரையும் மீட்க அஜித் உதவினார். விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். அப்போதும் கூட விஜய்யின் போட்டோவை காட்டி உதவிகள் செய்தது விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், நடிகர்கள் மக்களின் பசியை போக்கக் கூட ரெடியாகவில்லையா என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியிருந்தனர். ஒவ்வொரு முறையும் சென்னையில் மழை வெள்ளம் ஏற்படும் போது நடிகர்கள் குறித்து விமர்சனங்கள் எழுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் நடிகர் சிவாஜியின் போட்டோ ஒன்றை வெளியிட்டு தற்போதைய ஹீரோக்களை மறைமுகமாக ட்ரோல் செய்துள்ளார்.

அதாவது 1960ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தின் போது, சிவாஜி தனது வீட்டில் உணவு சமைத்து விநியோகித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "சென்னையில் 1960-ல் வெள்ளம் வந்தபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் வீட்டில் உணவு தயாரித்த புகைப்படம்" என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் மறைமுகமாக ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்களை ட்ரோல் செய்வதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X