Blue Sattai Maran: ”உங்களுக்கு எதுக்கு மீசை?” த்ரிஷா விவகாரத்தில் ஹீரோக்களுக்கு ப்ளூ சட்டை கேள்வி
சென்னை: லியோ படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசியது வைரலாகியுள்ளது.
த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும், அப்போது அவரை ரேப் செய்வதை போன்ற காட்சியில் நடிக்கலாம் என எதிர்பார்த்ததாக பேசியிருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்த திமிர் பேச்சுக்கு த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி பேசாமல் இருக்கும் முன்னணி ஹீரோக்களுக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்களுக்கெல்லாம் மீசை எதுக்கு
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ படத்தில் மன்சூர் அலிகான் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், விஜய்யின் ப்ளாஷ்பேக்கை மன்சூர் அலிகான் சொல்வதாக அமைந்திருக்கும். இந்நிலையில் இந்தப் படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார்.
அதாவது, லியோவில் த்ரிஷாவை ரேப் செய்வதாக சீன் இருக்கும் என எதிர்பார்த்தேன். குஷ்பூ, ரோஜா மாதிரி த்ரிஷாவையும் பெட்ரூமுக்கு தூக்கிச் சென்று அவரை ரேப் செய்வது போல நடிக்கலாம் என நினைத்தேன். ஆனால் த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை என பேசியிருந்தார். மேலும் இப்பலாம் வில்லன் நடிகர்களுக்கு ரேப் சீன்ஸில் நடிக்க சான்ஸ் கிடைப்பதில்லை எனவும் கூறியிருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு திரையுலகில் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட த்ரிஷா மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும் மன்சூர் அலிகானுக்கு கண்டம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். இவர்கள் தவிர இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகைகள் குஷ்பூ, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த பிரச்சினையில் முன்னணி ஹீரோக்கள் யாரும் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, “த்ரிஷா குறித்து மன்சூர் பேசியதற்கு நடிககைகள் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குநர்களில் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் போன்றோர் மட்டுமே பேசியுள்ளனர்.”
“முன்னணி நடிகர்கள், சீனியர் இயக்குநர்கள் அனைவரும் வாயில் கொழுக்கட்டையை வைத்துள்ளனர். இவர்களுடன் பல படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். ஆனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை. படத்தில் மட்டுமே பெண்களுக்காக புரட்சி வசனம் பேசுவார்கள் இந்த ஹீரோக்கள். சீனியர் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்னும் சுத்தம். உங்களுக்கு எல்லாம் எதுக்கு மீசை?” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











