Blue Sattai Maran: "குருவி, சுறா, புலி, பீஸ்ட் ஓடல... ஆடு ஓடுமா?.." GOAT ட்ரோலை தொடங்கிய ப்ளூ சட்டை
சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தில் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. ஏற்கனவே வெளியான தகவலின் படி, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற GOAT என்ற டைட்டில் தான் உறுதியாகியுள்ளது. இந்த டைட்டில் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தாலும், இன்னொரு பக்கம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ப்ளூ சட்டை மாறனும் தனது ட்ரோலை தொடங்கியுள்ளார்.
ஆடு ஓடுமா - ப்ளூ சட்டை மாறன் சம்பவம்
விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. அதன்படி The Greatest of All Time என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. The Greatest of All Time என்பதன் சுருக்கமாக GOAT என ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்யின் லுக்கும் படத்துக்கு தரமான ஹைப் கொடுத்துள்ளது.

விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிப்பதும் The Greatest of All Time ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியாகிவிட்டது. இந்நிலையில் கோட் என்ற இந்த டைட்டில் தமிழில் 'ஆடு' என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அவர்களுடன் ப்ளூ சட்டை மாறனும் பங்கம் செய்துள்ளார். ஏற்கனவே விஜய்யின் படங்களை வச்சு செய்வது ப்ளூ சட்டை மாறனின் வழக்கம். இப்போது The Greatest of All Time என்ற டைட்டில் அவரை இன்னும் உசுப்பேத்தி விட்டுள்ளது.
இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "குருவி, சுறா, பைரவா, புலி, பீஸ்ட், லியோ... எதுவும் ஓடல... ஆடு ஓடுமா..?" என போஸ்ட் போட்டுள்ளார். அதாவது விஜய்யின் சமீபத்திய படங்களின் டைட்டில்கள் பெரும்பாலும் விலங்குகளின் பெயர்களை வைத்தே இருந்தன. அதேபோல் தற்போது GOAT என்பதும் 'ஆடு' தான் என குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் படமாவது ஓடுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
குருவி, சுறா, பைரவா, புலி, பீஸ்ட், லியோ என இந்தப் படங்கள் எதுவும் பெரிதாக சக்சஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அஜித்துக்கு மங்காத்தா மாஸ் ஹிட் கொடுத்ததை போல, விஜய்க்கு GOAT சூப்பர் ஹிட்டாக அமைய வேண்டும் என வெங்கட் பிரபு தீயாக உழைத்து வருகிறார். இதனால் ப்ளூ சட்டை மாறனின் ட்ரோல்களுக்கு படம் ரிலீஸாகும் போது பதிலடி கிடைக்கும் என விஜய் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
GOAT அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்குகிறது. ஜனவரி முதல் வாரம் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் மற்ற நடிகர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இதனிடையே GOAT படத்தின் ஒன்லைன் டி.பி கூப்பரின் பயோபிக்காக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











