Blue Sattai Maran: “தல தளபதி சலூன்..” லியோ ட்ரோலை தொடங்கிய ப்ளூ சட்டை மாறன்... பிரபாஸ் ஏமிரா இது!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது.
லோகேஷின் தரமான சம்பவம் என விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
லியோவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே 'தல தளபதி சலூன்' என்ற கேப்ஷனுடன் லியோ ட்ரோலை தொடங்கியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

லியோ தல தளபதி சலூன்: விஜய்யின் லியோ திரைப்படம் எதிர்பார்த்ததை போல இன்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ, பான் இந்தியா படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களும் லியோவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் அதிகாலை 4 மணி ஷோ, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது.
அதன்படி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவின் பெங்களூரு, மும்பை போன்ற பல ஏரியாக்களில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், லியோ ரிலீஸை முன்னிட்டு திரையரங்குகளின் முன்பு விஜய்யின் கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் விதவிதமான கேப்ஷன்களுடன் போஸ்டர்களும் அடித்திருந்தனர்.
இந்நிலையில் ஆந்திராவின் ஒரு பகுதியில், லியோ படத்திற்காக வைக்கப்பட்ட விஜய் கட்அவுட் வைரலாகி வருகிறது. அதில் அவரது போஸ்டர் அருகே பான் இந்தியா ஹீரோ பிரபாஸும் செம்ம மாஸாக போஸ் கொடுத்துள்ளார். லியோ வெற்றிக்காக விஜய்க்கு மாஸ் கொடுத்துள்ளனர் பிரபாஸ் ரசிகர்கள். இதனிடையே லோகேஷ் விரைவில் பிரபாஸுடன் இணையவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லியோவை தொடர்ந்து தலைவர் 171, கைதி 2, விக்ரம் 2, இரும்பு கை மாயாவி, ரோலக்ஸ் என லோகேஷின் லைன் அப் பிஸியாகவே உள்ளது. அதன்பின்னர் தான் பிரபாஸின் படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ். இதனால், அவர் இயக்கத்தில் வெளியான லியோவை பிரபாஸ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் லியோ படத்தின் வெற்றிக்காக 'பிரபாஸ் - விஜய் ஃபேன்ஸ்' என ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.
இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், 'தல தளபதி சலூன்' என தனது ட்ரோல் கணக்கைத் தொடங்கியுள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் தல தளபதி காமெடியை வைத்து பஞ்ச் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். வழக்கமாக படத்தின் விமர்சனத்தில் பங்கம் செய்யும் ப்ளூ சட்டை, லியோ படத்தை விஜய்யின் கட்அவுட்டில் இருந்தே தொடங்கிவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











