BlueSattai: "CSK-ன் அயலானுக்கு பொங்கல் வைக்க வருகிறாரா கேப்டன் மில்லர்?" கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்தது.

ஆனால், இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 Blue Sattai Maran: Blue Sattai Maran troll Captain Miller release to compete with Ayalaan

அதே பொங்கல் தினத்தில் லால் சலாம், அயலான் திரைப்படங்கள் வெளியாகின்றன.

இந்நிலையில், கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதி பொங்கலுக்கு மாற்றப்பட்டது குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

அயலானுக்கு பொங்கல் வைக்கும் கேப்டன் மில்லர்
தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பீரியட் ஜானரில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது கேப்டன் மில்லர்.

இந்நிலையில், கேப்டன் மில்லர் டிசம்பர் 15ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திடீரென ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு, இப்போது பொங்கலுக்கு களமிறங்கும் என அறிவித்துள்ளது. டிசம்பர் 22ம் தேதி பிரபாஸின் சலார், ஷாருக்கானின் டுங்கி திரைப்படங்கள் வெளியாகின்றன. இதனால் தான் கேப்டன் மில்லர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதேநேரம் பொங்கலுக்கு ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படங்கள் ரிலீஸாகின்றன. இதில் லால் சலாம் படத்தை தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், பொங்கல் ரேஸில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் - சிவகார்த்திகேயன் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்த கேப்டன் மில்லர் ரிலீஸாகிறது.

 Blue Sattai Maran: Blue Sattai Maran troll Captain Miller release to compete with Ayalaan

இந்நிலையில், இதனை வைத்து தன் பங்கிற்கு கொளுத்திப் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்வீட்டில், "Salaar, Dunki க்கு பயந்து பொங்கலுக்கு தாவினாரா அல்லது தனது பரம எதிரி CSK வின் அயலானுக்கு பொங்கல் வைக்க வருகிறாரா கேப்டன் மில்லர்?" என பதிவிட்டுள்ளார். இன்னொரு ட்வீட்டில், 'குறுக்க இந்த கௌஷிக் வந்தா?' என லால் சலாம் படத்தை குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலத்தில் அவருக்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் தனுஷ். இணைபிரியா நண்பர்கள் போல சுற்றி வந்த இருவரும், திடீரென பிரிந்தனர். இதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை டார்க்கெட் செய்து தான், தனது கேப்டன் மில்லர் பட ரிலீஸை பொங்கலுக்கு மாற்றிவிட்டார் தனுஷ் என ரசிகர்களே கூறி வருகின்றனர். இப்போது ப்ளூ சட்டை மாறனும் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X