Blue Sattai Maran: “ஜெயிலர் வசூல் தமன்னாவால் தான்”... பாக்ஸ் ஆபிஸ் பஞ்ச் வைத்த ப்ளூ சட்டை!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ஃபீவர் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலாகியுள்ளது.

10ம் தேதி ரிலீஸாகவுள்ள ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்னும் ஓரிரு தினங்களில் தொடங்கவுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் வசூல் எப்படி இருக்கும் என கோலிவுட்டில் மிகப் பெரிய விவாதமே நடந்து வருகிறது.

 Blue Sattai Maran: Blue Sattai Maran troll Kaavaalaa song hits 100 Million views

இந்நிலையில் ஜெயிலர் வசூலில் முக்கால் பங்கு தக தக தமன்னாவால்தான் வரப்போகிறது என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

ஜெயிலர் வசூல் தமன்னாவால் தான்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் ரஜினிக்கு மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து தோல்வியில் சிக்கிய ரஜினிக்கு, ஜெயிலர் தான் இப்போதைய ஒரே ஆறுதல்.

இதனால், ஜெயிலர் படத்திற்காக சன் பிக்சர்ஸ் தரப்பில் தாறுமாறாக ப்ரொமோஷன் செய்யப்படுகிறது. கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல் விக்ரம் படம் இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலில் முக்கால் பங்கு தக தக தமன்னாவால்தான் வரப்போகிறது என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு அதகளம் செய்துள்ளார். "சூப்பர் சூரியன்' தமன்னாவின் ஜெயிலர். 10 ஆம் தேதி முதல்" எனவும் கேப்ஷன் கொடுத்துள்ள அவர், காவாலா சாங் 100 மில்லியன் பார்வைகளை கடந்த போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதாவது காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் தமன்னாவுக்காகவே ஜெயிலர் படத்தை பார்க்க ரசிகர்கள் படையெடுப்பார்கள் என சொல்லாமல் சொல்லியுள்ளார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran troll Kaavaalaa song hits 100 Million views

ஆகமொத்தம் ஜெயிலர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமாக இல்லாமல், தமன்னாவின் மூவியாக மாறிவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல ப்ளூ சட்டை மாறனை வச்சு செய்து வருகின்றனர். நிச்சயமாக ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு செம்ம மாஸ் கம்பேக் கொடுக்கும் எனவும், அது பொறுக்காமல் ப்ளூ சட்டை மாறன் இப்படி தொடர்ந்து ட்வீட் போடுவதாகவும் பொளந்துகட்டி வருகின்றனர்.

ரஜினி ரசிகர்களின் கமெண்ட்ஸ்களுக்கு ப்ளூ சட்டை மாறனும் பதில் கொடுத்து வருவது, டிவிட்டரையே சூடாக்கியுள்ளது. இன்னும் 5 நாட்களில் ஜெயிலர் ரிலீஸாகவுள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனின் நெகட்டிவ் ட்ரோல்கள் ரஜினி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. ஆனாலும், ஜெயிலரை இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாற்றுவோம் என ரஜினி ரசிகர்கள் சூளுரைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X