Blue Sattai: "நல்லா உருட்டு... இது என்ன ஆயுர்வேத சிகரெட்டா?” மகேஷ் பாபுவை சுளுக்கெடுத்த ப்ளூ சட்டை
சென்னை: தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. இதில் பீடி பயன்படுத்தியது குறித்து மகேஷ் பாபு விளக்கம் கொடுத்திருந்தார். அதாவது குண்டூர் காரம் படத்தில் ஆயுர்வேத பீடி தான் பயன்படுத்தினோம் எனக் கூறியிருந்தார். இதனையடுத்து ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், மகேஷ் பாபுவை பங்கம் செய்துள்ளார்.
மகேஷ் பாபுவை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்
டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விரைவில் ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக அவரது குண்டூர் காரம் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. த்ரி விக்ரம் இயக்கத்தில் ஃபேமிலி ஜானரில் கமர்சியல் மூவியாக உருவாகியுள்ள குண்டூர் காரம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் குண்டூர் காரம் மாஸ் காட்டி வருகிறது.

அதன்படி இந்தப் படம் 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் மீனாட்சி செளத்ரி, ஸ்ரீ லீலா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் மகேஷ் பாபுவுடன் நடித்துள்ளனர். இந்நிலையில், குண்டூர் காரம் படத்தில் பீடி புகைக்கும் காட்சிகளில் நடித்தது குறித்து மகேஷ் பாபு விளக்கம் கொடுத்திருந்தார்.
அதாவது, "குண்டூர் காரம் படத்தில் நான் புகைத்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத பீடி. முதல்முறை ஒரிஜினல் பீடி புகைத்த கொஞ்ச நேரத்தில் தலை வலி வந்துவிட்டது. அதன் பின்னர் தான் இந்த ஆயுர்வேத பீடியை பயன்படுத்தினேன். அது நன்றாக இருந்ததால் குண்டூர் காரம் படம் முழுக்க அதனையே பயன்படுத்தினேன். நான் புகை பிடிக்கவும் மாட்டேன் அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்" எனக் கூறியிருந்தார்.
மகேஷ் பாபுவின் இந்த விளக்கம் கடும் சர்ச்சையானது. இதனையடுத்து ப்ளூ சட்டை மாறனும் மகேஷ் பாபுவை விமர்சித்ததுடன், ஒரு போட்டோவை ஷேர் செய்து கேள்வியும் எழுப்பியுள்ளார். மகேஷ் பாபுவின் இந்த விளக்கத்தை 'நல்லா உருட்டுன போ..' என முதலில் ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். பின்னர் இன்னொரு படத்தில் மகேஷ் பாபு சிகரெட் புகைக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள அவர், "தம்பி..இது என்ன? ஆயுர்வேத சிகரட்டா?" என கேட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுகளுக்கு நெட்டிசன்களும் ரியாக்ட் செய்து, விதவிதமாக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். வழக்கமாக கோலிவுட் ஹீரோக்களை மட்டுமே ட்ரோல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன், இப்போது எல்லை கடந்து டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவையும் சுளுக்கெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











