Blue Sattai Maran: "என்னது... லியோ வெற்றி விழாவா? 3 flop வெக்கமே இல்ல” ப்ளூ சட்டை கொடுத்த ரியாக்‌ஷன்

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான லியோ, இதுவரை 500 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இந்தப் படத்தின் வெற்றி விழா, நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த வெற்றி விழாவில், விஜய் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிகிறது.

இதுபற்றி ட்வீட் போட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், "என்னது... வெற்றி விழாவா" என லியோவை கலாய்த்துள்ளார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran Troll on Vijays Leo Success meet

என்னது... வெற்றி விழாவா..?
விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் லியோவுக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு இல்லை, முதல் வாரத்துடன் தியேட்டர்கள் வெறிச்சோடி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் விஜய்யும் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக பாதுகாப்புக் கேட்டு லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 Blue Sattai Maran: Blue Sattai Maran Troll on Vijays Leo Success meet

இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக தான் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. அப்போது பெரியமேடு காவல் நிலையத்தில் மன்னிப்புக் கேட்டு லியோ படக்குழுவினர் கடிதம் கொடுத்திருந்தனர். இந்நிலையில், லியோ வெற்றி விழாவை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran Troll on Vijays Leo Success meet

லியோ வெற்றிவிழா பற்றிய தகவலை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "என்னது... வெற்றி விழாவா.." என ஒரே வரியில் விஜய் ரசிகர்களை வச்சு செய்துள்ளார். இதனால் ப்ளூ சட்டை மாறனை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அங்கேயும் அடங்காத ப்ளூ சட்டை, "3 flop தந்துட்டு வெக்கமே இல்லாம வெற்றிவிழா வக்கிறது அவங்க வேலை. போ.. அங்க போய் விசிலடி" என பதிலடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X