Leo: “கப்பு முக்கியம் பிகிலு..” லியோ சக்சஸ் மீட்... வடிவேலு மீம்ஸுடன் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ, கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதேநேரம் இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என பிரபல சினிமா விமர்சகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது.

இதையெல்லாம் கடந்து லியோ படத்தின் வெற்றி விழாவை கொண்டாட தயாரிப்பு நிறுவனம் ரெடியாகிவிட்டது.
லியோ வெற்றி விழா பற்றிய செய்திகள் வைரலாகி வரும் நிலையில், ஒரெயொரு மீம்ஸ் போட்டு விஜய்யை வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
விஜய்யை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி ரிலீஸானது. லலித் குமார் தயாரித்த இந்தப் படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கோலிவுட்டில் இந்தாண்டு அதிகம் ஹைப் கொடுத்து வெளியான படங்களில் லியோவும் ஒன்று. லியோ தான் கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
அதன்படி, முதல் நாளில் லியோவுக்கு தரமான ஓபனிங் இருந்தது. ஒரே நாளில் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது. ஆனால், இரண்டாவது நாளில் இருந்தே லியோவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்தது. லாஜிக் இல்லாத கதை, திரைக்கதை, சொதப்பலான இரண்டாம் பாதி, மேக்கிங்கில் மிஸ்ஸான லோகேஷின் டச், செல்ஃப் எடுக்காத LCU என லியோவில் இருக்கும் குறைகளை வரிசை கட்டி விளாசினர் நெட்டிசன்கள்.

இருப்பினும் இந்தப் படம் இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் இதில் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.
லியோ வெற்றி விழாவை ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக ட்ரோல் செய்து வருகிறார். இதுபற்றி முதலில் ட்வீட் செய்திருந்த அவர், "என்னது... வெற்றி விழாவா.." என ஒரே வரியில் கலாய்த்திருந்தார். மேலும், "3 flop தந்துட்டு வெக்கமே இல்லாம வெற்றிவிழா வக்கிறது அவங்க வேலை. போ.. அங்க போய் விசிலடி" என விஜய் ரசிகர்களையும் கடுப்பேற்றினார். இதனையடுத்து தற்போது வடிவேலு மீம்ஸுடன் மீண்டும் விஜய்யை வம்பிழுத்துள்ளார்.
"Leo - Success Meet, Behind the scenes" என்ற கேப்ஷனுடன் ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், வடிவேலுவின் தெறிமாஸ் மீம்ஸையும் ஷேர் செய்துள்ளார். 'கோயில்' படத்தில் போட்டியில் வெற்றிப் பெற்றதாக சொல்லி மற்றவர்களை ஏமாற்ற, அவரே ஒரு கப் வாங்கி பாத்திர கடையில் தனது பெயரை அடித்துக்கொள்வார் வடிவேலு. அதே நிலைதான் லியோவுக்கும் என மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவரது இந்தப் பதிவில் விஜய் ரசிகர்கள் வழக்கம் போல வந்து கும்மியடித்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











