Blue Sattai Maran: "ஜவான் BTS... ஒரே தமாசுதான்..” ப்ளூ சட்டை மாறனிடம் சிக்கிய அட்லீ!!
சென்னை: இந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
அட்லீ இயக்கிய ஜவான் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
திரையரங்குகளைத் தொடர்ந்து நவம்பர் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ஜவான் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஜவான் BTS போட்டோவை ஷேர் செய்துள்ள அட்லீயை 'ஒரே தமாசுதான்' என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.

அட்லீ ஒரே தமாசுதான்: ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் இயக்குநர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக இருந்து இயக்குநர் ஆனவர் அட்லீ. இதனால், அவரும் ஷங்கரின் வழியில் பிரம்மாண்ட இயக்குநராகவே வலம் வருகிறார். ஆனாலும் அவர் சூப்பர் ஹிட்டான பழைய படங்களை பட்டி டிங்கரிங் செய்து ரீமேக் செய்வது அப்பட்டமாகவே தெரிகிறது.
இந்நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார் அட்லீ. ஷாருக்கான் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான ஜவான், கடந்த மாதம் 7ம் தேதி வெளியானது. பான் இந்தியா படமாக ரிலீஸான ஜவான், அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் முதன்முறையாக 1000 கோடி வசூலில் இணைந்த கோலிவுட் இயக்குநர் என்ற பெருமை அட்லீக்கு கிடைத்துள்ளது.
இன்னொருபக்கம் ஜவான் வெற்றி அட்லீக்கு சொந்தமானது கிடையாது எனவும், ஷாருக்கான் இல்லையென்றால், ஜவான் நிலைமை இன்னும் மோசமாகிருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், ஜவான் கதையும் சர்ச்சையில் சிக்கியது. பல படங்களின் காப்பியாகவும், ஏகப்பட்ட மாஸ் சீன்களை ஜவானில் அப்படியே காப்பிகட் செய்துள்ளதாகவும் அட்லீ மீது விமர்சனங்கள் வந்தன. ஆனாலும், அட்லீ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கெத்தாக வலம் வருகிறார்.

இந்நிலையில், ஜவான் திரைப்படம் நவம்பர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ள ஜவான் படத்தை பார்க்க, ஓடிடி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதனால், மீண்டும் ஜவான் படத்தின் ப்ரோமோஷனை தொடங்கியுள்ளார் அட்லீ. அதன்படி ஜவான் படத்தின் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
Bts # Jawan என்ற கேப்ஷனுடன் பைக்கில் அமர்ந்திருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். ரெட் கலரில் பிரிண்டட் ஷார்ட்ஸ் & சட்டை அணிந்து மஜாவான காஸ்ட்யூமில் கலக்குகிறார் அட்லீ. இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், வழக்கம்போல அட்லீயை பங்கம் செய்துள்ளார். 'ஒரே தமாசுதான்..' என ஒரே வார்த்தையில் அட்லீயை சோலி முடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











