BlueSattai: "அப்ப.. மீதிப்படம்?” ஜிகர்தண்டா டபுள் X தனுஷ் விமர்சனம்... சோலி முடித்துவிட்ட ப்ளூ சட்டை

சென்னை: எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இன்று வெளியானது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Dhanushs Jigarthanda Double X review

இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை நடிகர் தனுஷ் பாராட்டி விமர்சனம் செய்திருந்தார்.

தனுஷின் விமர்சனத்தை ஒரே வார்த்தையில் கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

தனுஷை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியான ஜிகர்தண்டா, பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா 2014ம் ஆண்டு வெளியானது.

அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவாகியுள்ளது. இதனால், முதல் பாகத்தை விட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தரமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் மலையாள நட்சத்திரங்கள் சைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை நடிகர் தனுஷ்க்கு தனியாக போட்டுக் காட்டியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், நேரடியாக ஓடிடியில் வெளியாகி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Dhanushs Jigarthanda Double X review

இதனிடையே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு விமர்சனம் கூறியுள்ள தனுஷ், கார்த்திக் சுப்புராஜ்ஜின் மேக்கிங், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் நடிப்பு சூப்பர் என பாராட்டியுள்ளார். அதேபோல் சந்தோஷ் நாராயணனின் இசையும் சிறப்பாக இருப்பதாகக் கூறியுள்ளார். முக்கியமாக படத்தின் கடைசி 40 நிமிடங்கள் காட்சி மனதை கொள்ளை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு தனுஷ் பாசிட்டிவாக விமர்சனம் செய்துள்ளது, படக்குழுவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஆனால், அதனை சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். தனுஷின் விமர்சனத்துக்கு "அப்ப மீதிப் படம்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது கடைசி 40 நிமிடங்கள் சூப்பர் என்றால், மீதிப் படம் எப்படி எனக் கேட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த கேள்வி நியாயமானது தான் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X