Blue Sattai Maran: "அட்லீ பல ஹாலிவுட் பட காட்சிகளை இயக்கிவிட்டதால்.." பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தமிழில் இதுவரை 4 படங்கள் இயக்கியுள்ள அட்லீ, தற்போது பாலிவுட்டிலும் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்தியில் அவர் இயக்கிய ஜவான் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், தனக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்ததாக கூறியிருந்தார். இந்நிலையில், "அட்லீ பல ஹாலிவுட் பட காட்சிகளை இயக்கிவிட்டதால்" என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

அட்லீயை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்: ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசீம் ஆகியோர் நடித்த ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ஷங்கரிடம் உதவியாளராக இருந்து அதன்பின்னர் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார். ராஜா ராணிக்குப் பின்னர் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களில் விஜய்யுடன் இணைந்தார்.
இந்தப் படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததால், பாலிவுட்டில் படம் இயக்க அட்லீக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்தார் ஷாருக்கான். அப்படி உருவான ஜவான் திரைப்படம் இம்மாதம் 7ம் தேதி வெளியானது. முதல் நாளில் இருந்தே வசூலில் மாஸ் காட்டிய ஜவான், இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன்மூலம் முதன்முறையாக ஆயிரம் கோடி வசூலில் இணைந்த கோலிவுட் இயக்குநர் என்ற பெருமை அட்லீக்கு கிடைத்துள்ளது.
அதேநேரம் இது அட்லீயின் வெற்றி கிடையாது எனவும், ஷாருக்கான் இல்லையென்றால், ஜவான் 200 கோடி கூட வசூல் செய்திருக்காது என சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர். முன்னதாக ஜவான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, அட்லீ விரைவில் ஹாலிவுட்டில் படம் இயக்க வேண்டும் என வாழ்த்துக் கூறினார். அதன் தொடர்ச்சியாக அட்லீயும் தனது ஹாலிவுட் என்ட்ரி குறித்து ஜவான் சக்சஸ் மீட்டில் பேசியிருந்தார்.

அதாவது, ஜவான் பட காட்சிகளைப் பார்த்த சில ஹாலிவுட் பிரபங்கள், தன்னை ஹாலிவுட்டில் படம் இயக்க வரவேண்டும் என அழைத்ததாகக் கூறினார். மேலும், ஹாலிவுட்டில் நான் படம் இயக்கினால் அவர்களும் அதில் பணிபுரிய ரெடியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது டிவிட்டரில் அட்லீயை கலாய்த்துள்ளார்.
"இந்த இயக்குநர் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிற இயக்குநர் யார்?" என ஒரு வலைதளம் ரசிகர்களிடம் கேள்விக் கேட்டுள்ளது. அதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "அட்லீ.. பல ஹாலிவுட் பட காட்சிகளை இயக்கிவிட்டதால்.. அவரை தவிர்த்து வேறு இயக்குனர் பெயரை கூறுமாறு.." என பங்கமாக கலாய்த்துள்ளார். ஜவான் படத்தின் காட்சிகள் அனைத்தும் பல படங்களில் இருந்து சுடப்பட்டது என ஏற்கனவே விமர்சனங்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











