Blue Sattai Maran: “நெறைய footage இருந்தா வெப் சீரிஸ் பண்ணுங்க..” இந்தியன் 2 ப்ளூ சட்டை அட்டாக்!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2.
இந்தப் படத்தின் இன்ட்ரோ க்ளிம்ப்ஸ் கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் 3ம் தேதி வெளியாகிறது.
இதனிடையே இந்தியன் 2 படத்தை இரு பாகங்களாக பிரித்து இந்தியன் 3 என்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
இந்தியன் 2 இரு பாகங்களாக வெளியாகவிருப்பதை ப்ளூ சட்டை மாறன் மறைமுகமாக கலாய்த்துள்ளார்.

இந்தியன் 2-வை சைலண்டாக அட்டாக் செய்த ப்ளூ சட்டை
உலகநாயகன் கமல் நடிப்பில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2, தற்போது தான் முடிவுக்கு வரவுள்ளது. இந்தியன் படத்தின் 2ம் பாகமாக உருவாகும் இதனை ஷங்கர் இயக்கியுள்ளார். பட்ஜெட் பிரச்சினை, கிரேன் விபத்து போன்ற காரணங்களால் கிடப்பில் இருந்த இந்தியன் 2, விக்ரம் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் டேக் ஆஃப் ஆனது.
லைகா புரொடக்ஷனுடன் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்ததால், ஷங்கர் ஓவர் டைம் வேலை பார்த்து இந்தியன் 2 படத்தை முடித்துள்ளார். இதனால் எதிர்பார்த்ததை விட அதிகமான காட்சிகளை ஷூட் செய்துவிட்டாராம். இப்போது அதனை எடிட்டிங்கில் வெட்டி வீச மனமில்லாமல் கமலிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இந்தியன் 2-வை இரண்டு பாகங்களாக பிரித்து, இந்தியன் 3 படத்தையும் முடிவுத்துவிட ஷங்கர் முடிவு செய்துவிட்டாராம்.
இதற்காக கமல்ஹாசன் கூடுதலாக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சென்னை, வைசாக் என இரண்டு லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடத்த ஷங்கர் பிளான் செய்து ஷெட்யூல் போட்டுள்ளாராம். இந்தியன் 2 என ஆரம்பித்து இப்போது 3ம் பாகம் வரை சென்றுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், நெட்டிசன்கள் இதெல்லாம் தேவையில்லாத ஆணி என ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
அவர்களுக்கே டஃப் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இந்தியன் 2 படத்தை மறைமுகமாக கலாய்த்துள்ள அவர், "நெறைய footage எடுத்திருந்தா.. அதை வெப் சீரிஸா ரிலீஸ் பண்ணுங்கடா. எடிட் பண்ணாத குப்பைகளை சேத்துவச்சி பார்ட் 2, 3, 4, 5 படம் எடுத்து எங்க உயிரை வாங்காதீங்க" என பங்கம் செய்துள்ளார். தற்போது கோலிவுட்டில் இரண்டாம் பாகம் எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனை கலாய்க்கும் விதமாகவே ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நவம்பர் 3ம் தேதி இந்தியன் 2 இன்ட்ரோ க்ளிம்ப்ஸ் வெளியாகவுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில், இந்தியன் 3 அப்டேட்டும் அபிஸியலாக அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











