Blue Sattai Maran: "பருத்திவீரன் அமளிதுமளி.. மிக்சர் சாப்பிடும் கார்த்தி": கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் அமீர் திருடன் என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் ஞானவேல்ராஜா.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Karthi for the Paruthiveeran controversy

இதனையடுத்து அமீருக்கு ஆதரவாக மெளனம் பேசியதே தயாரிப்பாளர் கணேஷ் ரகு, சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

இதில் கார்த்தியின் அமைதியை சுட்டிக் காட்டி சமுத்திரகனி விமர்சனம் செய்திருந்த நிலையில், ப்ளூ சட்டை மாறனும் மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்துள்ளார்.

மிக்சர் சாப்பிடும் கார்த்தி
கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கியிருந்தார். 2007ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஞானவேல்ராஜா தயாரித்தார். இந்நிலையில் பருத்திவீரனை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் 2.75 கோடி பட்ஜெட்டில் முடிப்பதாக சொல்லிவிட்டு, இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை அமீர் செலவு செய்தார். அதுமட்டும் இல்லாமல் பொய்யான கணக்கு எழுதி தன்னை ஏமாற்றிவிட்டதாக ஞானவேல்ராஜா கூறியிருந்தார்.

முன்னதாக பருத்திவீரன் சர்ச்சையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் இயக்குநர் அமீர். கடந்த சில தினங்களாக அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அமீர் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஞானவேல்ராஜா, ஒருகட்டத்தில் அவரை திருடன் எனவும் கூறினார். இதனால், இந்தப் பிரச்சினை கோலிவுட்டில் புயலை கிளப்பியுள்ளது.

இதனையடுத்து மெளனம் பேசியதே பட தயாரிப்பாளர் கணேஷ் ரகு, அமீருக்கு ஆதரவாக பேட்டிக் கொடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சசிகுமார், நடிகர் சமுத்திரகனி ஆகியோரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமீர் குறித்து ஞானவேல்ராஜா சொல்வது அனைத்தும் பொய் எனவும் அவர்கள் பல உண்மைச் சம்பவங்களை குறிப்பிட்டனர்.

சமுத்திரகனி வெளியிட்ட அறிக்கையில், ரொம்ப தப்பு பண்ணிட்டு இருக்கீங்க ப்ரோ. தப்பு தப்பா பேசிருக்கீங்க. கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்ததாக ஞானவேல் ராஜாவை எச்சரித்திருந்தார். மேலும் பருத்திவீரன் படத்தில் ஆரம்பம் முதல் கடைசிவரை இருந்தவன் நான், எல்லா பிரச்சினையும் எனக்குத் தெரியும் என குறிப்பிட்டிருந்தார். அதேபோல், பருத்திவீரன் படப்பிடிப்பின் போது நடந்த பல சம்பவங்களை குறிப்பிட்டும் ஞானவேல்ராஜாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

முக்கியமாக அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும் என்ன வேணாலும் பேசியிருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்குறத தான் என்னால ஏத்துக்க முடியல. கார்த்தியின் எதிர்காலத்துக்காகவே அமீர் தன்னால் முடிந்த எல்லா தியாகங்களையும் செய்து இந்தப் படத்தை முடித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அவ்வளவு தூரம் பெருந்தன்மையா நடந்துக்கிட்ட ஒரு மனுசனைதான் எல்லாருமா சேர்ந்து கணக்கு கேட்டீங்க என காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இறுதியாக இப்ப நான் சொன்னது எல்லாம் ஒரு சம்பவம் தான். இன்னும் நிறைய இருக்கு, தேவைப்பட்டா நானும் பேச வேண்டி வரும். இந்தமாதிரி பொதுவெளில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கோங்க. அதுதான் எல்லோருக்கும் நல்லது என காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார் சமுத்திரகனி. இதில் கார்த்தி அமைதியாக இருப்பது குறித்து சமுத்திரகனி கூறியது அவரது ரசிகர்களுக்கே அதிர்ச்சிக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தை வைத்து கார்த்தியை மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ”பருத்திவீரன் குறித்து இவ்வளவு அமளிதுமளி நடக்கும்போது இந்த பிரச்னை பற்றி நன்கு அறிந்த நடிகர் கார்த்தி அமைதி காப்பது ஏன்? - சமுத்திரக்கனி கேள்வி” என ட்வீட் போட்டுள்ள அவர், நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் மீம்ஸை அதில் ஷேர் செய்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்களும் அமீருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X