Blue Sattai Maran: "இதுக்கு ஸ்பாய்லர் வேறயா..” புஸ்வானமான ஜப்பான்... போட்டுத் தாக்கிய ப்ளூ சட்டை!

சென்னை: கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. ராஜூ முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் சென்னை காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கார்த்தி, ஜப்பான் படம் தொடர்பான ஸ்பாய்லர்களை ரசிகர்கள் வெளியே சொல்ல வேண்டாம் என்றார். கார்த்தியின் இந்த ஓவர் கான்பிடன்ட்டை சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Karthis Japan movie

ஜப்பான் படத்துல ஸ்பாய்லர் இருக்குதா?
கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ளது ஜப்பான் மூவி. ராஜூ முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில், கேஎஸ் ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ், பவா செல்லத்துரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியான ஜப்பான் படத்துக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. கடந்தாண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் வெளியானது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை பதம் பார்த்த சர்தார், பாக்ஸ் ஆபிஸிலும் வின்னராக ஜொலித்தது. ஆனால், தற்போது ரிலீஸான ஜப்பான், கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துடன் மோதியது.

இந்த தீபாவளிக்கு ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் படம் தான் பட்டாசாக தெறிக்கிறது. ஜப்பான் படத்தின் கதை சூப்பர் என்றாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை என பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காசி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து ஜப்பான் படத்தை பார்த்து ரசித்தார் கார்த்தி. திரையரங்கிற்குச் சென்ற கார்த்தியை, ரசிகர்கள் ஆடிப்பாடி வரவேற்றனர்.

ரசிகர்களுடன் படம் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியேறிய கார்த்தி, ”எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது. ஜப்பான் படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். எனது மனது நிறைவாக உள்ளதாக” கூறியிருந்தார். மேலும், ஜப்பான் படம் தொடர்பான ஸ்பாய்லர்களை வெளியே கூறாமல் இருக்க வேண்டும் என அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். ஒரு வார்த்தையில் “இதுக்கு ஸ்பாய்லர் வேறயா” என ட்வீட் போட்டுள்ளார். ஜப்பான் படத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ப்ளூ சட்டை மாறன், இன்னும் முழுமையான விமர்சனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பாய்லருக்கே கார்த்தியை பாய்லரில் போட்டு கொதிக்க விட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், விமர்சனத்தில் பங்கம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X