Blue sattai Maran: "உருட்டு”... விஜய்க்கு முட்டுக் கொடுத்த லோகேஷ்... புரட்டி எடுத்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியானது.

இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக விஜய் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையானது.

இந்த சம்பவத்துக்கு நானே பொறுப்பு என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்திருந்தார்.

இதனையடுத்து விஜய்க்கு முட்டுக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்ஜை 'உருட்டு' என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Lokesh for bad words in Leo

இது லோகேஷின் உருட்டு
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், வரும் 19ம் தேதி வெளியாகிறது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள லியோ, ஆக்‌ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மாஸ்டர் படத்தில் ஹிட் அடித்த விஜய் - லோகேஷ் காம்போ, லியோவிலும் ரியல் சம்பவம் செய்திருப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே, அக்டோபர் 5ம் தேதி லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதில் பார்த்திபன், லியோ என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்திருப்பதாக ரசிகர்களுக்கு ஹைப் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் லியோ ட்ரெய்லரில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் லியோ ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக கெட்டவார்த்தை இடம்பெற்றிருந்தது. இதனை ஹீரோ விஜய்யே பேசி நடித்திருந்தார். அதிகமான வன்முறை காட்சிகளுடன் இப்படி கெட்ட வார்த்தையும் இடம்பெற்றதால், லியோ ட்ரெய்லரை பலரும் நெகட்டிவாக விமர்சித்திருந்தனர். இதனையடுத்து இந்த சர்ச்சைகளுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த சம்பவத்துக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை எனவும், நான் வற்புறுத்தியதால் தான் அவர் அப்படி பேசியதாகவும் லோகேஷ் கூறியிருந்தார். லியோ ட்ரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தை கதைக்கும் அந்த கேரக்டருக்கும் மிகவும் தேவைப்பட்டது. விஜய் இந்த வசனத்தை பேசலாமா என தயக்கத்துடன் கேட்டார். ஆனால், கண்டிப்பாக இது தேவை என அழுத்தமாக கூறியதால் தான் விஜய் பேசினார் என லோகேஷ் கூறியிருந்தார்.

மேலும், விஜய் அப்படி கெட்ட வார்த்தை பேசியது யாருடைய மனதையும் கஷ்டப்படுத்தியிருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்வதாக லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்த விளக்கத்துக்கும் நெட்டிசன்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து லோகேஷின் விளக்கத்தை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், 'உருட்டு' என ஒரே வார்த்தையில் லோகேஷை புரட்டி எடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X