Blue Sattai Maran: "லியோ வசூலில் எனக்கு சம்பந்தம் இல்லை.. லோகேஷ் எஸ்கேப்.." ப்ளூ சட்டை மாறன் பங்கம்!

சென்னை: லியோ திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Lokesh Kanagaraj for Leo Box Office Controversy

இந்நிலையில் லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என லோகேஷ் கூறியிருந்தார்.

இதனை லோகேஷ் எஸ்கேப் என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

லோகேஷ் கிரேட் எஸ்கேப்
மாநகரம் திரைப்படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது கோலிவுட்டின் டாப் மோஸ்ட் இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார். கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்ததோடு, இப்போது விஜய்யின் லியோ படத்தையும் இயக்கியிருந்தார். கடந்த 19ம் தேதி ரிலீஸான லியோவுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இதனால் முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்த லியோ, பாக்ஸ் ஆபிஸில் 148 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால், அதிகளவில் நெகட்டிவான விமர்சனங்கள் வெளியானதால், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் தடுமாறியது. அதேநேரம் ஒரு வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அபிஸியலாக அறிவித்தது. அதன் பின்னர் தற்போதைய நிலவரப்படி 500 கோடி கலெக்‌ஷனை லியோ தாண்டிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக லியோ ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் என, சினிமா ட்ராக்கர்கள் பந்தயம் கட்டி வந்தனர். விஜய் - லோகேஷ் கூட்டணியில் முதல் LCU படம், விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன் என மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் மூவி, ஹாலிவுட் ரேஞ்சில் ஆக்‌ஷன் ட்ரீட் என 360 டிகிரியில் லியோவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டது. இறுதியில் படம் வெளியானதும் ரசிகர்களே தெறித்து ஓடும் நிலையில் திரையரங்குகளை விட்டு வெளியேறினர்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Lokesh Kanagaraj for Leo Box Office Controversy

ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரே, லியோ ஆயிரம் கோடியெல்லாம் வசூலிக்காது என முட்டுக் கொடுத்தார். அதேபோல், லியோ டிக்கெட் புக்கிங்கில் தயாரிப்பாளர் லலித் குமார் மோசடி செய்துள்ளதாக, திருப்பூர் சுப்ரமணியம் குற்றம்சாட்டினார். இப்படி எல்லா வகையிலும் லியோவை சுற்றி சர்ச்சைகள் வைரலாகி வருகின்றன. இதனிடையே தற்போது லியோ வெற்றிவிழா கொண்டாட்டத்துக்கும் படக்குழு ரெடியாகிவிட்டது.

இந்நிலையில், லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, "லியோ வசூலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என கூலாக பதிலளித்தார். லியோ ரிலீஸாகும் முன்பே பாக்ஸ் ஆபிஸ் பஞ்சாயத்துக்குள் நான் வரமாட்டேன் என லோகேஷ் கூறியிருந்தார். சம்பளம் வாங்கி படம் இயக்கும் போது, வசூல் பற்றியெல்லாம் நான் ஏன் கவலைப்பட வேண்டும் என பேட்டிக் கொடுத்திருந்தார்.

இப்போது லியோ படத்துக்கு நெகட்டிவான ரிசல்ட் கிடைத்துள்ளதால், இன்னும் ஸ்ட்ராங்காக பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி பேசுவதை தவிர்த்துள்ளார். இதனை பார்த்த ப்ளூ சட்டை மாறன், வழக்கம் போல லோகேஷ் கனகராஜ்ஜை பங்கம் செய்துள்ளார். லோகேஷின் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டேட்மெண்ட்டை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள அவர், 'எஸ்கேப்' என ஒரே வார்த்தையில் கலாய்த்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X