Blue Sattai: “பவுடர், ரத்தம் படிந்த முகங்கள்.. லோகேஷ் வகையறாக்களின் கவனத்திற்கு:” ப்ளூ சட்டை பங்கம்!
சென்னை: அயலான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் உருவாகியுள்ளது. இதுகுறித்து அயலான் பட தயாரிப்பாளர் பேசிய போது, லோகேஷ் கனகராஜ்ஜை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.
லோகேஷ் வகையறாக்கள் கவனத்திற்கு
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள அயலான் திரைப்படம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாகிறது. பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகும் அயலான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் உருவாகியுள்ளது. முக்கியமாக இந்திய சினிமாவில் முதல் ஏலியன்ஸ் படமாக அயலான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் பல சிக்கல்களை கடந்து பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவிருந்த அயலான், கிராபிக்ஸ் ஒர்க்ஸ் முடியாததால் பொங்கலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 5ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக அயலான் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. முதலில் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடக்கவிருந்த அயலான் ஆடியோ லான்ச், சிம்பிளாகவே முடிந்துவிட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அயலான் பட தயாரிப்பாளர், சிவகார்த்திகேயனை பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தார். அதற்கு சிவகார்த்திகேயன் நான் அப்படியெல்லாம் கிடையாது என கிரேட் எஸ்கேப் ஆனார். அதேநேரம் அயலான் தயாரிப்பாளர் கேஜே ராஜேஷ் மறைமுகமாக லோகேஷ் கனகராஜ்ஜை பங்கமாக கலாய்த்திருந்தார். "அயலான் ஏற்கனவே ஒரு ப்ளாக் பஸ்டர், நாங்கள் ஏலியனை நம்புகிறவர்கள். பவுடர் (போதை மருந்து) ரத்தம் படிந்த மேக்கப் கொண்ட முகங்கள் போன்றவற்றை நம்புபவர்கள் கிடையாது" என பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சு லோகேஷ் கனகராஜ்ஜை டார்கெட் செய்தது போல இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதாவது லோகேஷின் முதல் படமான மாநகரம் முதல் கடைசியாக வெளியான லியோ வரை, எல்லாவற்றிலும் கஞ்சா, போதை பொருள், மது, ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் தான் முக்கியமாக இருக்கும். போதை இல்லா சமூகம் என்பதே தனது லட்சியம் என சொல்லும் லோகேஷ், அவரது படங்களில் இப்படியான காட்சிகளை வைத்து பிழைப்பு நடத்துவதாக விமர்சித்திருந்தனர்.
இப்போது அயலான் தயாரிப்பாள கேஜே ராஜேஷ் பேசியதும் இதே தான் என நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். அவர்களுடன் ப்ளூ சட்டை மாறனும் இணைந்து லோகேஷ் கனகராஜ்ஜை பங்கம் செய்துள்ளார். அயலான் தயாரிப்பாளர் கேஜே ராஜேஷ் பேசியதை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "லோகேஷ் கனகராஜ் வகையறாக்களின் கவனத்திற்கு" என கேப்ஷன் கொடுத்து நேரடியாகவே லோகேஷை ட்ரோல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











