Blue Sattai Maran: "ஒரேயொரு பேய் காமெடி கான்செப்ட்..” ராகவா லாரன்ஸை உருட்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை பி வாசு இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், H வினோத், நெல்சன் ஆகியோரை ராகவா லாரன்ஸ் பாராட்டியிருந்தார்.
இதனை குறிப்பிட்டு ராகவா லாரன்ஸை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ஒரெயொரு பேய் காமெடி கான்செப்ட் தான்: குரூப் டான்ஸர்களில் ஒருவராக இருந்து, டான்ஸ் மாஸ்டராக மாறியவர் ராகவா லாரன்ஸ். அப்படியே சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த அவர், பின்னர் கோலிவுட்டின் முழுநேர ஹீரோவாகிவிட்டார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து இயக்குநராகவும் ராகவா லாரன்ஸ் சில படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது அவர் பி வாசு இயக்கியுள்ள சந்திரமுகி 2-வில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. கடந்த 15ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம், சில காரணங்களாக வரும் 28ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இளம் இயக்குநர்கள் குறித்து ராகவா லாரன்ஸ் பாராட்டி பேசியிருந்தார்.
அதாவது, லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத், நெல்சன் ஆகியோர் இயக்கும் படங்கள் சூப்பராக இருக்கின்றன. புதுசா ட்ரை பண்றாங்க. அதேநேரம் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், திரைக்கதைக்கும் ஆக்ஷனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஓர்க்அவுட் ஆகிறது. இதனால் நாமும் அதற்கேற்றபடி மாறவேண்டும் என தோன்றுவதாகக் கூறியிருந்தார்.
இந்த கன்டென்ட்டை வைத்து ராகவா லாரன்ஸை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். "மூன்று பேரும் கதைக்கு முக்கியத்துவம் தருவதில்லை தான். ஆனால், ஒரேயொரு பேய் காமெடி கான்சப்டை வைத்து பல வருசமா உருட்டற நீங்க சொன்னா சரிதான்" என்பதாக ட்விட்டரில் போஸ்ட் போட்டுள்ளார். அதாவது ராகவா லாரன்ஸ் இயக்கிய படங்களில் பேய் காமெடி மட்டுமே இருப்பதாக ட்ரோல் செய்துள்ளார்.
மாஸ் திரைப்படம் மூலம் இயக்குநரான ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, கஞ்சனா 3 என தொடர்ந்து பேய் சீரிஸ் படங்களாக இயக்கி வருகிறார். முனி, காஞ்சனா படங்கள் சூப்பர் ஹிட்டானதால், தனது பேய் காமெடி ட்ராக்கிலேயே சேஃப்டியாக வண்டி ஓட்டி வருகிறார் ராகவா லாரன்ஸ். இதனை சுட்டிக் காட்டும்விதமாக தான் ப்ளூ சட்டை மாறனும், ராகவா லாரன்ஸை கலாய்த்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











