Blue Sattai: "விஜயகாந்த் மகனுக்கு உதவுவேன்” ஒரே வார்த்தையில் ராகவா லாரன்ஸை சோலி முடித்த ப்ளூ சட்டை
சென்னை: கடந்த மாதம் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் ராகவா லாரன்ஸ் அஞ்சலி செலுத்தியிருந்தார். மேலும், விஜயகாந்த் இல்லம் சென்ற அவர், கேப்டனின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதுமட்டும் இல்லாமல் விஜயகாந்த் மகனுடன் இணைந்து நடிக்கவும் விருப்பம் தெரிவித்திருந்தார். இதனை வைத்து ராகவா லாரன்ஸை ஒரே வார்த்தையில் கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
ஒரே வார்த்தையில் ராகவா லாரன்ஸ் காலி
தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமா, அரசியல், பொதுவாழ்வு என தான் பயணித்த அனைத்திலும் விஜயகாந்த் செய்த உதவிகள் ஏராளம். விஜய், சூர்யா போன்ற இளம் ஹீரோக்களுக்காக அவர்களுடன் கேமியோ ரோலிலும் நடித்துக் கொடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தாத ராகவா லாரன்ஸ், தனது அம்மாவுடன் விஜயகாந்த் இல்லம் சென்று இறுதி மரியாதை செய்தார். மேலும், விஜயகாந்தின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியிருந்தார். அதன்பின்னர் வீடியோ வெளியிட்ட அவர், அதில் விஜயகாந்தின் மகனுக்கு உதவ ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது, "நானும் எனது தாயாரும் மறைந்த தேமுதிக தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு கடந்த திங்கள் கிழமையைன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். பின்னர் விஜயகாந்த் இல்லம் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்."
"அப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து கொண்டிருப்பது பற்றி என்னிடம் சொன்னார்கள். திரையுலகை சேர்ந்த நீங்கள் எல்லோரும் தான் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. விஜயகாந்த் சார் திரையுலகிற்கு செய்யாத உதவிகளே இல்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் கேமியோ கெஸ்ட் ரோல் எல்லாம் செய்வார். அவர் பல ஹீரோக்களை வளர்த்து விட்டிருக்கிறார்."
"அவர் நடித்த கண்ணுபட போகுதைய்யா படத்தில் 'மூக்குத்தி முத்தழகு' பாடலுக்கு நான் கோரியோகிராபி செய்திருக்கிறேன். ரொம்ப அழகாக நடனமாடினார் என்னையும் ரொம்ப என்கிரேஜ் செய்தார். அப்படிப்பட்டவரின் பையனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. சண்முக பாண்டியன் நடிக்கும் படம் வெளியாகும் போது முழு வீச்சில் வரவேற்பு தர நானே இறங்கி அனைத்து விளம்பர பணிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன். அந்தப் படக்குழு விருப்பப்பட்டால் அவர்களோடு படத்தின் விளம்பர விழாக்களில் கலந்துகொள்வேன்."
"திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோள், யாராவது நல்ல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள். சண்முகப் பாண்டியனோடு இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன். இது அவரது குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை, அப்போது அவரது ஆத்மா சந்தோசப்படும். இது என் மனதிற்கு தோன்றியது. அவரது மூத்த மகன் பிரபாகரன் அரசியலில் இருக்கிறார் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள். இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன்" என பேசியிருந்தார்.
ராகவா லாரன்ஸின் இந்த வீடியோ வைரலான நிலையில், இதனை நடிப்பு என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், 'அடடா' என ஒரே வார்த்தையில் ரகவா லாரன்ஸை சோலி முடித்துள்ளார். முக்கியமாக ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவின் கீழ், ஏராளமான நெட்டிசன்களும் ராகவா லாரன்ஸை கலாய்த்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இந்த உதவியை விஜயகாந்த் இருக்கும் போதே செய்திருக்க வேண்டியதானே எனவும், ராகவா லாரன்ஸ் ஹீரோவா நடிச்சாலே ஒடாது இதுல கேமியோ வேறயா எனவும் கலாய்த்துள்ளனர். இன்னொரு நெட்டிசனோ, "லாரன்ஸ் தயவுசெய்து அது மட்டும் செய்திடாதீங்க, பாவம் அந்தப் பையன் நல்லா வரட்டும்" என பங்கம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











