Blue Sattai Maran: “விஜய்க்கு முன்னால தலைவர் ஜுஜுபி தான்..” ரஜினியை ரோஸ்ட் செய்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.
இந்த ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ட்ரெய்லர் வெளியாகி இரண்டு மாதங்களாகியும் இதுவரை 30 மில்லியன் வியூஸ் மட்டுமே கிடைத்துள்ளது.
இதனை குறிப்பிட்டு 'தலைவர் ஜுஜுபி' என ரஜினியை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

காக்கா கழுகுன்னு சேர்த்து வச்ச சொத்து
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், லியோ ட்ரெய்லர் நேற்று முன்தினம் மாலை வெளியானது. விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெறித்தனமான ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது லியோ ட்ரெய்லர்.
அதிகமான வன்முறை காட்சிகள், விஜய் கெட்ட வார்த்தை பேசியது என பல சர்ச்சைகளை கடந்தும், லியோ ட்ரெய்லருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் லியோ படத்தின் எதிர்பார்ப்பும் இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியான லியோ ட்ரெய்லர், 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், லியோ ட்ரெய்லரின் சாதனையை வைத்து, ரஜினியை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி வெற்றிப் பெற்றது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்பட்டது. மேலும், ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக கொடுத்து ஜெயிலர் வெற்றியை கொண்டாடினார் கலாநிதிமாறன்.
முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றி மனம் திறந்து பேசியிருந்தார் ரஜினி. அப்போது கக்கா, கழுகு என குட்டி ஸ்டோரி சொல்லி, நானே எப்போதும் சூப்பர் ஸ்டார் என மறைமுகமாக பேசியிருந்தார். விஜய்யை கார்னர் செய்தே ரஜினி இப்படி பேசியதாக சொல்லப்பட்டது. அதற்கு காரணம் வாரிசு இசை வெளியீட்டு விழாவில், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் பேசியிருந்தார்.
இதற்கான பதிலடியாக தான் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பஞ்ச் கொடுத்து ரஜினி பேசியதாக சொல்லப்பட்டது. மேலும் ஜெயிலர் படத்தின் பாடல்களிலும் ஹைப் கொடுக்கும் விதமாக வரிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், ஜெயிலர் ட்ரெய்லர் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஆனால், விஜய்யின் லியோ ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் ஜெயிலர் ட்ரெய்லர் சாதனையை தகர்த்துள்ளது.
இதனையடுத்து, விஜய்யின் அசுர வளர்ச்சிக்கு முன்னால் தலைவர் ஜுஜுபி என ரஜினியை கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். மேலும், "காக்கா கழுகுன்னு சொல்லி சேர்த்து வச்ச சொத்து... 2 மணி நேரத்துல இப்படி காலி பண்ணிட்டீங்களே" என மீம்ஸ் போட்டு பங்கம் செய்துள்ளார். இதன்மூலம் இப்போதைய நிலவரப்படி ரஜினியை விட விஜய்க்கே ரசிகர்களும் மார்க்கெட் வேல்யூவும் அதிகம் என்பதை ப்ளூ சட்டை மாறன் சைலண்டாக சொல்லியுள்ளார்.


Click it and Unblock the Notifications











