Blue Sattai Maran: ”விஜய் யுனிவர்சில் சேர தலீவர் விரும்பவே மாட்டார்..” ரஜினியை சீண்டிய ப்ளூ சட்டை!

சென்னை: ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து தலைவர் 170 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார் ரஜினிகாந்த்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படம் LCU கான்செப்ட்டில் இருக்காது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து "விஜய் யுனிவர்ஸில் சேர தலீவர் விரும்பவே மாட்டார்" என ரஜினியை வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran Trolled Rajini for Thalaivar 171 is not LCU

விஜய் யுனிவர்ஸில் சேர தலீவர் விரும்ப மாட்டார்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் உற்சாகமான ரஜினிகாந்த், அடுத்தடுத்து தலைவர் 170, தலைவர் 171 படங்களில் கமிட்டானார். இதனிடையே தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயகக்தில் லால் சலாம் படத்திலும் நடித்திருந்தார். ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், 2024 பொங்கலுக்கு வெளியாகிறது.

தலைவர் 170 படத்தை தசெ ஞானவேல் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதேபோல் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இரண்டு படங்களுக்குமே அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும், தலைவர் 171ல் ரஜினியும் லோகேஷும் இணைவது தரமான சம்பவமாக அமைந்துள்ளது. இந்தப் படம் லோகேஷின் LCU யுனிவர்ஸில் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் ரசிகர்களின் அந்த கனவை லோகேஷ் கனகராஜ் இப்போதே கலைத்துவிட்டார். லியோ ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ், தலைவர் 171 LCU ஜானரில் வராது எனவும், அது ரஜினிக்கான தனி ஸ்டோரி என்றும் கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஐமேக்ஸ் கேமராவிலேயே ஷூட் செய்யப்படவுள்ள தலைவர் 171. ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் எனவும் லோகேஷ் அப்டேட் கொடுத்திருந்தார்.

லோகேஷின் இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. தலைவர் 171 LCU கான்செப்ட்டில் உருவானால், அதில், கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்பிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேநேரம் விஜய்யின் லியோவும் LCU படம் தானா என்பதை லோகேஷ் இதுவ்ரை கன்ஃபார்ம் செய்யவில்லை.

இதனையடுத்து லோகேஷின் இந்த அப்டேட்டை ட்ரோல் கன்டென்ட்டாக மாற்றியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், "காரணம்: விஜய் யூனிவர்சில் சேர தலீவர் விரும்பவே மாட்டார்" என குறிப்பிட்டுள்ளார். அதாவது தலைவர் 171 லோகேஷ் யுனிவர்ஸின் கீழ் வராமல் இருபதற்கான காரணம், ரஜினிக்கு விஜய்யுடன் இணைவதில் விருப்பம் இல்லை என்பதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X