Blue Sattai: "மதவெறிக்கு எதிராக கெத்தாக குரல் குடுக்கும் தலீவர்..” லால் சலாம்-ஐ கிழித்த ப்ளூ சட்டை

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் ரிலீஸான போது இமயமலை சென்றிருந்தார்.

அங்கிருந்து அயோத்தி சென்ற அவர், ராமர் கோயிலில் வழிபாடு செய்தது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லால் சலாம் டீசரில், "விளையாட்டில் மதமா" என ரஜினி பேசிய வசனம் கவனம் ஈர்த்துள்ளது.

இதனை, "மதவெறிக்கு எதிராக கெத்தாக குரல் குடுக்கும் தலீவர்" என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran Trolled Rajinikanths Lal Salaam teaser

தலீவரை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதனால் செம்ம மாஸ்ஸாக கம்பேக் கொடுத்துள்ள ரஜினி, தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசரை படக்குழு தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட்டது. கிரிக்கெட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள லால் சலாம், விளையாட்டில் காணப்படும் மத அரசியல் குறித்து பேசியுள்ளது. குறிப்பாக இந்து - முஸ்லீம் இடையேயான மோதல், அதன் பின்னால் இருக்கும் அரசியல் பற்றியெல்லாம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. லால் சலாம் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதால், படம் குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், லால் சலாம் டீசரையும், அதில் ரஜினியின் மத அரசியலுக்கு எதிரான வசனங்களையும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "மதவெறிக்கு எதிராக கெத்தாக குரல் குடுக்கும் தலீவர்" என கலாய்த்துள்ளார். இன்னொரு டிவிட்டர் பதிவில் 'சிகப்பு சலாம் டீசர்: விளையாட்டுல மதத்தை கலந்து இருக்காங்க - தலீவர் வசனம். திரிசூலம், உடுக்கை கொண்ட வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியம். Jai Shri Ram என பாகிஸ்தான் vs இந்தியா போட்டியில் முழக்கம். இதைத்தான் கெத்தாக எதிர்க்கிறாரா தலீவர்?" என பதிவிட்டுள்ளார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran Trolled Rajinikanths Lal Salaam teaser

ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுகள் ட்வீட்டரில் வைரலாகி வருகின்றன. அதாவது ஜெயிலர் வெளியாகும் போது இமயமலை சென்ற ரஜினி, பின்னர் அங்கிருந்து அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கும் சென்றிருந்தார். அதேபோல், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்தார். இதனால் ரஜினி மீது தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran Trolled Rajinikanths Lal Salaam teaser

இதனையெல்லாம் சுட்டிக் காட்டும் விதமாக தான் சூப்பர் ஸ்டார் ரஜினியை கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ரஜினிகாந்த் நிஜத்தில் ஒருவிதமாகவும், சினிமாவில் இன்னொரு முகத்தையும் காட்டுகிறார் என மறைமுகமாக பங்கம் செய்துள்ளதாக நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு சப்போர்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X