Blue Sattai Maran: "நீலாம்பரி கேரக்டர் ஜெ., தான்.. அப்ப தலீவர்": ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் கேரக்டர் குறித்து கேஎஸ் ரவிக்குமார் பேசியிருந்தார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரக்டரை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

blue-sattai-maran-blue-sattai-maran-trolled-rajinis-character-in-padayappa

படையப்பா ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய திரைப்படம் படையப்பா. 1999ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பாட்ஷாவுக்குப் பின்னர் ரஜினிக்கு மாஸ் ஹிட் கொடுத்த படம் படையப்பா தான். இந்தப் படத்தில் ரஜினியுடன் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா, அப்பாஸ், நாசர், செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பொதுவாக வில்லன்களுடன் மோதும் சூப்பர் ஸ்டார், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் மோதியிருப்பார். ரஜினியை ஒருதலையாக காதலிக்கும் ரம்யா கிருஷ்ணன், அவர் கிடைக்காமல் போனதால் என்ன ஆனார் என்பது தான் கதை. அதோடு அவர் ரஜினியை பழிவாங்க முயற்சி செய்வதும் அதனை சூப்பர் ஸ்டார் எப்படி துவம்சம் செய்கிறார் என்பதையும் பரபரப்பான திரைக்கதையோடு இயக்கியிருப்பார் கேஎஸ் ரவிக்குமார்.

படையப்பா படத்தில் ரஜினியை விடவும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கேரக்டர் தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும், ஃபீல்ட் அவுட்டாக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு தரமான கம்பேக் கொடுத்தது. இந்த கேரக்டரில் முதலில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ரஜினி ஆசைப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீலாம்பரி கேரக்டர் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தற்போது மனம் திறந்துள்ளார்.

அதாவது, படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை வைத்து எழுதியது தான் என்ற உண்மையை கூறியுள்ளார். இந்தப் படம் வெளியான போதே நீலாம்பரி கேரக்டர் ஜெயலலிதாவாக தான் இருக்கும் என ரசிகர்கள் பேசிக் கொண்டனர். ஏனெனில் அப்போது ரஜினி - ஜெயலலிதா இடையே சில உரசல்கள் இருந்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரக்டர் குறித்து கேஎஸ் ரவிக்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். நீலாம்பரி ஜெயலலிதா என்றால், 'அப்ப தலீவர்' யார் என்பதாக ட்வீட் போட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X