Blue Sattai Maran: “மிஸ்டர் பாரத்... தலைவர் அப்பவே அப்படி!!” கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் வெற்றியை படக்குழுவினர் கடந்த வாரம் கொண்டாடித் தீர்த்தனர்.
இன்னொரு பக்கம் இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றப் போவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், சைலண்ட் மோடில் இருக்கும் சூப்பர் ஸ்டாரை இந்தச் சம்பவத்தில் கோர்த்துவிட்டுள்ளார் ப்ளூசட்டை மாறன்.
ரஜினி நடித்த மிஸ்டர் பாரத் படத்தின் போஸ்டரை ஷேர் செய்து கலாய்த்து வருகிறார்.

தலைவர் அப்பவே அப்படி: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்த ஜெயிலர், கோலிவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. இதனையடுத்து ரஜினி, இயக்குநர் நெல்சன், ராக்ஸ்டார் அனிருத் ஆகியோருக்கு கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார் கலாநிதி மாறன்.
ஜெயிலர் வெளியான போது இமயமலை சென்றிருந்த ரஜினிகாந்த், அங்கிருந்து உபி-யில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். மேலும் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தும் ஆசி பெற்றார். இந்த விவகாரம் சர்ச்சையானதோடு, ரஜினியை பலரும் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு பிரச்சினையில் ரஜினியை கோர்த்துவிட்டு ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு INDIA என்று பெயர் வைத்துள்ளன. ஒரு நாட்டின் பெயரை எப்படி தேர்தல் கூட்டணிக்கு வைக்கக் கூடாது என பாஜக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேலும், INDIA என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற முடிவு செய்துள்ளதாம். ஜி 20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, குடியரசுத் தலைவர் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மக்களவை கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்றம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியா - பாரத் பெயர் மாற்றம் குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் சேவாக் பாரத் என்ற பெயர் மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் சைலண்ட் மோடில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியை, ப்ளூ சட்டை மாறன் வம்பிழுத்துள்ளார். ரஜினி நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் மிஸ்டர் பாரத். இந்தப் படத்தின் போஸ்டரை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "தலைவர் அப்பவே அப்படி" என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











