Blue Sattai: “ஞான ஈட்டிக்காக இப்பயாச்சும் பேசுங்கய்யா..” சூர்யா, கார்த்தியை வம்பிழுத்த ப்ளூ சட்டை
சென்னை: அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, தற்போது கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோவாக கலக்கி வருகிறார்.

இந்நிலையில், பருத்திவீரனால் இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இருவரிடையே மோதல் வெடித்துள்ளது.
இதில் அமீருக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், சூர்யா, கார்த்தியை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.
ஞான ஈட்டிக்காக இப்பவாச்சு பேசுங்க
கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன், இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அமீர் இயக்கத்தில் பக்கா கல்ட் கிளாஸிக் மூவியாக இந்தப் படம் உருவாகியிருந்தது. கார்த்தியை மதுரை பின்னணியில் ஒரு கிராமத்து ஹீரோவாக செதுக்கியிருந்தார் அமீர். பருத்திவீரன் தான் கார்த்தியின் கேரியருக்கு மிகப் பெரிய ஓபனிங் கொடுத்தது.
இந்தப் படதை அமீர் இயக்க, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்திருந்தார். ஆனால், படம் வெளியாகும் முன்பே இயக்குநர் அமீர் - ஞானவேல்ராஜா இடையே மோதல் உருவானது. இதனால் தனக்கு 2 கோடி வரை நஷ்டம் எனக் கூறியிருந்தார். மேலும், இந்தப் பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து அமீர் சமீபத்தில் பேசியது தீடிரென பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து பருத்திவீரன் குறித்தும் அமீரின் குற்றச்சாட்டுகள் பற்றியும் ஞானவேல்ராஜா விளக்கம் கொடுத்திருந்தார். அதில் அமீர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் திருடன் எனவும் கூறியிருந்தார். மேலும், பல விரும்பத்தகாத வார்த்தைகளால் அமீர் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
ஞானவேல்ராஜாவின் இந்த பேட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அமீருக்கு ஆதரவாக மெளனம் பேசியதே பட தயாரிப்பாளர் கணேஷ் ரகு அமெரிக்காவில் இருந்தபடி பேட்டிக் கொடுத்தார். அதில் அமீர் குறித்து அவர் பாராட்டி பேசியதோடு, ஞானவேலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து பருத்திவீரன் வெளியாக பணம் கொடுத்து உதவிய சசிகுமாரும் ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த வரிசையில் பருத்திவீரன் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலைப் பார்த்த சமுத்திரகனி, ப்ரியாமணியின் அப்பா கேரக்டரில் நடித்த பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டவர்கள் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதனால், சமூக வலைத்தளங்களிலும் அமீருக்கு அதிகளவில் ஆதரவு குவிந்து வருகிறது. இதனை டார்க்கெட் செய்த ப்ளூ சட்டை மாறன், சூர்யா, கார்த்தியை பங்கமாக கலாய்த்துள்ளார்.
அதாவது, “தற்போதைய ஸ்கோர்: அமீருக்கு ஆதரவு: 4. சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கொங்கரா, பொன்வண்ணன். ஞான ஈட்டிக்கு ஆதரவு: 0. 'இப்பயாச்சும் பேசுங்கய்யா' பாய்ண்ட் வரட்டும். பாய்ண்ட் வரட்டும்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும், அதன் கீழ் ரஜினி முருகன் பட காமெடி டெம்ப்ளேட்டை வைத்து, ஞான ஈட்டி என ஞானவேல்ராஜாவை ட்ரோல் செய்துள்ளார். அதேபோல், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸை கனவு வாரியர், சூர்யாவை அஞ்சான், கார்த்தியன் ஜப்பான் என அடை மொழியோடு ட்ரோல் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











