Blue Sattai: “ஜெயிலர் ஓட முக்கியமான காரணம் தமன்னா தான்... கார் கொடுக்கலயா..?” ப்ளூ சட்டை பங்கம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
ஜெயிலர் வெற்றியை சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் கார்களை பரிசாக கொடுத்து கொண்டாடினார்.
இதனிடையே ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலின் முழு வீடியோ யூடியூப்பில் வெளியானது.
வெளியான மூன்றே நாட்களில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

ஜெயிலரை மீண்டும் பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்: அண்ணாத்த படத்துக்குப் பின்னர் ரஜினி நடித்த ஜெயிலர், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி - இயக்குநர் நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்த இந்தப் படம், எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்த ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பாக வசூல் செய்தது.
அதன்படி, ஜெயிலர் திரைப்படம் இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தமன்னா நடிகையாகவே நடித்திருந்ததோடு, 'காவாலா' பாடலுக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்திருந்தார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாகவே காவாலா பாடல் தான் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காவாலா பாடல் வெளியான போதே, தமன்னாவுக்காக ஜெயிலர் படம் பார்க்கலாம் என ரஜினி ரசிகர்கள் கூறியிருந்தனர். அதேபோல், ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலரும் "ஜெயிலர் இனி ரஜினி படம் கிடையாது, தமன்னாவின் ஜெயிலர்" என ட்ரோல் செய்திருந்தனர். இப்போது படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. ஆனாலும் தமன்னாவை வைத்து ஜெயிலர் படத்தை விடாமல் ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

காவாலா பாடலின் முழுமையான வீடியோவை, மூன்று தினங்களுக்கு முன்னர் யூடியூப்பில் வெளியிட்டது படக்குழு. தமன்னாவின் ஆட்டத்துக்காக மீண்டும் சூடுபிடித்த காவாலா பாடல், இதுவரை 10 மில்லியன் பார்வைகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது. இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "படம் ஓட முக்கியமான காரணம் தமன்னா. ஆனா அவங்களுக்கு காசோலையும் தரல. காரும் தரல. தர்மத்தின் வாழ்வுதனை.." என ட்ரோல் செய்துள்ளார்.
அதாவது ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு, தலா 1.5 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை பரிசாக கொடுத்து அசத்தினார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். ஆனால், ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்த காவாலா பாடலில் நடனமாடிய தமன்னாவை டீலில் விட்டது படக்குழு. இதனை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளது, ரஜினி ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. வழக்கம்போல ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











