Blue Sattai Maran: "மட்டன் ஸ்டால் ஓனரா நடிக்கிறாரா விஜய்?" இது ப்ளூ சட்டை மாறனின் தளபதி 68 சம்பவம்!
சென்னை: விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 50% முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய் மட்டன் கறிக்கடை ஓனராக நடிக்கிறாரா என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

விஜய் மட்டன் ஸ்டால் ஓனரா?
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால் விஜய்யின் தளபதி 68 படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் மூலம் முதன்முறையாக விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி 68 படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், தளபதி 68 திரைப்படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுபற்றி வெங்கட் பிரபுவோ அல்லது தளபதி 68 படக்குழுவோ எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. அதேநேரம் இது ஹாலிவுட் படமான ஜெமினிமேன் ரீமேக் வெர்ஷனாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வில் ஸ்மித் நடிப்பில் வெளியான ஜெமினிமேன், சயின்ஸ் பிக்ஷன் ஜானர் மூவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தளபதி 68 டைட்டில் குறித்து கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில் வெளியான தகவல்களின் படி தளபதி 68 டைட்டில் பாஸ் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுப்புத் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் தளபதி 68 டைட்டில் GOAT என லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. இந்த டைட்டிலை வைத்து விஜய்யை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
அவர்கள் வரிசையில் தற்போது ப்ளூ சட்டை மாறனும் இணைந்துள்ளார். தளபதி 68 டைட்டில் GOAT-ஆக இருந்தால், விஜய்யின் கேரக்டர் என்னவாக இருக்கும் என ட்ரோல் செய்துள்ளார். அதாவது, "மட்டன் கறிக்கடை ஓனராக நடிக்கிறாரா விஜய்?... GOAT. குடல் உருவி.." என பங்கம் செய்துள்ளார். GOAT என்ற டைட்டிலுக்கு விஜய் மட்டன் ஸ்டால் ஓனராக நடித்திருக்கலாம் என மறைமுகமாக கலாய்த்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் தளபதி 68 ட்ரோல் டிவிட்டர் பதிவை நெட்டிசன்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படத்தில் மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் இலங்கையில் தொடங்கவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











