Blue Sattai Maran: வாரிசு, துணிவு இரண்டில் எது பொங்கல் வின்னர்... ப்ளூ சட்டை மாறன் அடித்த சிக்ஸர்!

சென்னை: இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளியாகின.

விஜய், அஜித் என இருவரது படங்களும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரேநாளில் வெளியானது.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled the collection of Varisu and Thunivu films

இதனால், ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் போட்டி நிலவியது.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

ரியல் பொங்கல் வின்னர் பஞ்சாயத்து: இந்தாண்டு தொடக்கத்தில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகின. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் - அஜித் படங்கள் ஒரேநாளில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. வாரிசு, துணிவு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே, விஜய், அஜித் ரசிகர்கள் செம்ம வைப் செய்தனர்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled the collection of Varisu and Thunivu films

முதலில் போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பதில் தொடங்கிய பஞ்சாயத்து, பின்னர் எந்தப் படத்திற்கு அதிக ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்படும் என்பதில் வந்து நின்றது. ஆனால், வாரிசு - துணிவு என இரண்டு படங்களுக்கும் தமிழ்நாட்டில் சரிபாதி திரைகள் ஒதுக்கப்பட்டன. அதனையடுத்து பாக்ஸ் ஆபிஸ் பஞ்சாயத்து தொடங்கியது. விஜய், அஜித் இருவரில் யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என விவாதத்தை தொடங்கினர்.

அதேநேரம் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு படங்களுமே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றன. ஃபேமிலி சென்டிமெண்ட் ஜானரில் உருவான விஜய்யின் வாரிசு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதேபோல், ஆக்‌ஷன் ஜானரில் ரிலீஸான அஜித்தின் துணிவு திரைப்படமும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்தது. இதனால், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் பஞ்சாயத்தும் சமனில் முடிந்தது.

இந்நிலையில் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஆனால், அஜித் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் பைக் ட்ரிப் சென்றுவிட்டார். இதனிடையே இப்போதும் ரியல் பொங்கல் வின்னர் யார் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled the collection of Varisu and Thunivu films

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், வாரிசு, துணிவு படங்களில் எது ரியல் வின்னர் என்பதை கூறும் விதமாக மீம்ஸ் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனும் சூரியும் சண்டையிடும் போஸ்டரை செய்து, அவர்கள் இருவரையும் வாரிசு - துணிவு என கிரியேட் செய்துள்ளார். மேலும், நடுவில் செல்லும் ஒரு முதியவர். "ரியல் பொங்கல் வின்னர் சரக்கு தான்" என மதுவை குறிப்பிட்டுவிட்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

வாரிசு, துணிவு படங்களை விடவும் மது தான் அதிகம் விற்பனையாகியுள்ளதாகவும், உண்மையான கலெக்‌ஷன் படி சரக்கு தான் ரியல் வின்னர் எனக் கூறி ட்ரோல் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு, விஜய், அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் படங்கள் வெளியாகி இத்தனை மாதங்களுக்குப் பின்னர் பொங்கல் ரியல் வின்னர் யார் என்ற சண்டை தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X