Blue Sattai Maran: “அஜித் லைசென்ஸையும் கேன்சல் பண்ணுங்க..” கதறும் லைகா... ப்ளூ சட்டை மாறன் பங்கம்
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக அஜித் பைக் டூர் சென்றிருந்ததால் விடாமுயற்சி ஷூட்டிங் தாமதமானதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பைக் ரேஸர் TTF வாசனின் லைசென்ஸை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே கன்டென்ட்டை வைத்து அஜித்தின் லைசென்ஸையும் கேன்சல் செய்ய வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

அஜித் லைசென்ஸை கேன்சல் பண்ணுங்க எஜமான்
அஜித்தின் துணிவு இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது 62வது படத்தில் கமிட்டானார் அஜித். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட், அஜித் பிறந்தநாள் அன்று வெளியானது. அதன்படி, ஏகே 62 தற்போது விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகிறது.
அஜித், மகிழ் திருமேனி, லைகா, அனிருத் என இந்த நால்வர் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் த்ரிஷா, பிரியா பவானி சங்கர் ஆகியோரும் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அபிஸியலாக அறிவிக்கவில்லை.
விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க தாமதமானதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. படத்தின் ப்ரீ புரொடக்ஷன், ஸ்கிரிப்ட் வேலைகளை முடிக்க மகிழ் திருமேனிக்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டதாக சொல்லப்பட்டது. அதேபோல், இந்த பக்கம் அஜித் அடிக்கடி பைக்கில் டூர் சென்றுவிடுவதால் ஷூட்டிங் தொடங்க முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவித்தன. பைக் பிரியரான அஜித் திடீரென உலகம் சுற்ற கிளம்பிவிடுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் அஜித்தின் லைசென்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். வடிவேலு மீம்ஸுடன் உள்ள இந்த டிவிட்டர் பதிவில், "ஐயா அப்படியே இன்னொருத்தர் லைசென்ஸையும் நாங்க படம் எடுத்து முடிக்கும்வரையாவது கேன்சல் பண்ணுங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்" என வெளியாகியுள்ளது. அதில் வடிவேலுவை லைகா நிறுவனம் என மார்க் செய்யப்பட்டுள்ளது.
அதாவது சில தினங்களுக்கு முன்னர் பிரபல பைக்கர் TTF வாசன் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். சாலையில் ரேஸில் ஈடுபட்டதால் தான் இப்படி நடந்ததாக TTF வாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, TTF வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்பதோடு, அவரது லைசென்ஸை 10 ஆண்டுகளுக்கும் கேன்சல் செய்தது. அதன்படி TTF வாசன் லைசென்ஸ் 2033 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த கன்டென்ட்டை வைத்து அஜித்தை கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கிவிடும் என செய்திகள் வரும்போதெல்லாம், அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுகிறர். அவர் பைக் ட்ரிப் செல்லாமல் இருந்தால் விடாமுயற்சி ஷூட்டிங் எப்போதோ தொடங்கியிருக்கும் என கூறி வந்தனர். அதனை குறிப்பிட்டே அஜித்தின் லைசென்ஸை ரத்து செய்துவிட்டால் விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிரச்சினை இருக்காது என லைகா வேண்டுகோள் விடுப்பதை போல மீம் வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











