Blue Sattai Maran: "That பசங்க பண்ண நல்லது..” விஜய்ணாவை விடாமல் வெளுத்து வாங்கும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா இரு தினங்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த விழாவில், விஜய்யின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

அதேநேரம் விஜய் பேசியதை வைத்து பயங்கரமான ட்ரோல்களும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகின.

இந்நிலையில் ரோகிணி தியேட்டர் விவகாரத்தில் விஜய் பேசியதை வைத்தே பங்கம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Vijay again on the Rohini theatre issue

விஜய்ண்ணா பசங்க பண்ண நல்லது
மாஸ் ஹீரோவான விஜய் நடிப்பில் இந்தாண்டு வாரிசு, லியோ படங்கள் வெளியாகின. வாரிசு பெரிதாக வெற்றிப் பெறவில்லை என்றாலும், லியோ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. விஜய் - லோகேஷ் கூட்டணியில் LCU-ன் கீழ் உருவான இந்தப் படத்துக்கு முதல் நாளில் சிறப்பான ஓபனிங் இருந்தது. ஆனால், கலவையான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் டல்லடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் லியோ சக்சஸ் மீட், நேற்று முன்தினம் மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஏற்கனவே லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆகியிருந்ததால், வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்தியது படக்குழு. இதில், விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், சாண்டி மஸ்டர், லலித் குமார் என லியோ படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய விஜய், ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்தார். சூப்பர் ஸ்டார் டைட்டில், குட்டி ஸ்டோரி, 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என விஜய் கொடுத்த கன்டென்ட்டுகள் ஏராளம். விஜய்யின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தாலும், நெட்டிசன்களின் ட்ரோல்களுக்கும் பஞ்சமே இல்லை எனலாம். முக்கியமாக "எங்கே நல்லது நடந்தாலும் அது நம்ம பசங்க பண்ணதுன்னு இருக்கணும்" என விஜய் பேசியிருந்தார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Vijay again on the Rohini theatre issue

இதனை ப்ளூ சட்டை மாறன் ரோகிணி தியேட்டர் சம்பவத்துடன் சேர்த்து பங்கமாக கலாய்த்துள்ளார். லியோ படத்தின் ட்ரெய்லர் ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. அப்போது விஜய்யின் ஆக்‌ஷன்ஸ் பார்த்து மெர்சலான அவரது ரசிகர்கள், ரோகிணி தியேட்டரை சின்னாப் பின்னமாக சிதறடித்தனர். இதனால் தியேட்டரில் இருந்த இருக்கைகள், லைட்கள், ஸ்பீக்கர்கள் என 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Vijay again on the Rohini theatre issue

விஜய் ரசிகர்களின் இந்தச் சம்பவம், ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், ரோகிணி தியேட்டர் சம்பவத்தின் போட்டோவை பகிர்ந்து, "That பசங்க பண்ண நல்லது" என விஜய்ணாவுக்கு விபூதி அடித்துள்ளார். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X