Blue Sattai Maran: விஜய் பாவம்... அவரை விட்ருங்க... லோகேஷ் கனகராஜ்ஜிடம் கெஞ்சிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு அக்டோபரில் ரிலீஸான லியோ, எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விஜய் ஓகே சொன்னால் லியோ 2 உருவாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதனை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
விஜய் பாவம் அவரை விட்ருங்க
தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ. கடந்தாண்டு அக்டோபரில் ரிலீஸான இந்தப் படம் 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்துக்கு முதல் மூன்று நாட்கள் மட்டுமே சிறப்பான ஓபனிங் கிடைத்தது. அதன் பின்னர் நெகட்டிவான விமர்சனங்கள் காரணமாக லியோ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

லியோ படத்தின் இரண்டாம் பாகமும் திரைக்கதையும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. முக்கியமாக சஞ்சய் தத்தும் அர்ஜுனும் சேர்ந்து மடோனா செபாஸ்டியனை பலி கொடுக்கும் காட்சியை விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் கூட பங்கமாக கலாய்த்திருந்தார். லியோ வெளியான போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
ஆனால், விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்கவுள்ளார். அதன்படி, கோட், தளபதி 69 படங்களுக்குப் பின்னர் விஜய்யை சினிமாவில் பார்க்க முடியாது எனத் தெரிகிறது. இதன் காரணமாக லோகேஷின் லியோ 2 பிளான் முதல் பாகத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. அதேநேரம் LCU-ல் வரும் கைதி 2, விக்ரம் 2 படங்களுக்கான விஜய்யின் காட்சிகளை லியோ படப்பிடிப்பின் போதே லோகேஷ் எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லியோ இரண்டாம் பாகம் குறித்து லோகேஷ் பேசியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. லியோ 2 திரைப்படம் உருவாக வேண்டும், ஆனால் விஜய்யின் லட்சியம் வேறு எங்கோ இருக்கிறது. அதற்கும் எனது வாழ்த்துகள், ஆனாலும் லியோ 2 எடுப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. விஜய் எப்போது சொன்னாலும் லியோ 2 எடுக்க நான் ரெடி எனக் கூறினார்.
லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் திடீரென உற்சாகமாகினர். லியோ 2 உருவானால் அதுதான் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் எனவும் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். இந்நிலையில், லோகேஷின் இந்த ஆசைக்கு ப்ளூ சட்டை மாறன் ஃபுல்ஸ்டாப் வைக்க முயற்சித்து வருகிறார். "விஜய் பாவம்... அவரை விட்ருங்க.." என ஒரேயொரு ட்வீட் போட்டு லோகேஷை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், 2026 தேர்தலில் விஜய் தோற்றால் லியோ 2 உருவாகலாம் என கமெண்ட்ஸ் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











