Blue Sattai: விஜய், சிவகார்த்திகேயன் காலி... அடுத்த உங்க வீட்டுப்பிள்ளை யாரோ? ப்ளூ சட்டை நக்கல்!

சென்னை: விஜய்யின் லியோ அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி நெகட்டிவான விமர்சனங்களால் ட்ரோல் செய்யப்படுகிறது.

இன்னொரு பக்கம் இசையமைப்பாளர் டி இமான் கொடுத்த பேட்டியால் சிவகார்த்திகேயன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Vijay, Sivakarthikeyan for Ungal Veetu Pillai Title

அதேபோல், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2ம் பாகம் படுதோல்வியடைந்தது.

இந்த மூன்று சம்பவங்களையும் சேர்த்து வைத்து தரமான சம்பவம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அடுத்த உங்க வீட்டுப்பிள்ளை யாரோ?
விஜய் நடிப்பில் வெளியான லியோ, எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தாலும், விமர்சன ரீதியாக மோசமான நிலையில் உள்ளது. அதேபோல், கடந்த மாதம் வெளியான ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2ம் பாகமும் மரண அடி வாங்கியது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகி, அங்கும் ரசிகர்களால் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Vijay, Sivakarthikeyan for Ungal Veetu Pillai Title

இன்னொரு பக்கம் இதுவரை கோலிவுட்டின் பிரின்ஸாக வலம் வந்த சிவகார்த்திகேயன், தற்போது சர்ச்சையில் சிக்கி ட்ரோலுக்கு ஆளாகியுள்ளார். இசையமைப்பாளர் டி இமான் கொடுத்த ஒரேயொரு பேட்டி சிவகார்த்திகேயனின் கேரியரையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனையடுத்து விஜய், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ் மூவரையும் ஒரே டிவீட்டில் சோலி முடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அதாவது, "குழந்தைகள் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என பல ஆண்டுகளாக நம்பவைத்த நடிகர்கள்" என்ற கேப்ஷனில் ட்வீட் போட்டுள்ளார். அதில், "விஜய் ஒரு காலத்தில் கில்லி, திருப்பாச்சி என சிறந்த காதல் படங்களால் பெண்கள் மனதில் இடம் பிடித்தவர். ஆனால் பீஸ்ட், வாரிசு, லியோ என எதுவும் குடும்பங்களை கவரவில்லை‌‌. ராகவா லாரன்ஸ் பேய்காமெடி படங்களை தவிர எந்த கதையில் இவர் நடித்தும் தேறவில்லை. தற்போது சந்திரமுகி 2 வும் ஊத்திக்கொண்டது. இனி இதேமாதிரி பேய்காமெடியில் நடித்து வண்டி ஓட்ட முடியாது."

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Vijay, Sivakarthikeyan for Ungal Veetu Pillai Title

"சிவகார்த்திகேயன் உப்மா பட்ஜெட்டில் எடுத்த ப்ரின்ஸ் மக்களிடம் எடுபடவில்லை. மாவீரன் ஓரளவு தப்பினாலும்.. இசைமான் சர்ச்சையால்.. பெண்களிடம் இவரது இமேஜ் கடும் டேமேஜ் ஆகியுள்ளதாம்‌. ஆகவே இப்போதைக்கு தமிழில் 'குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோ' இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாது. அடுத்து பெண்கள், குழந்தைகளை ஏமாற்ற வரப்போகும் உங்க வீட்டுப்பிள்ளை யாரோ?" என பதிவிட்டுள்ளார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolled Vijay, Sivakarthikeyan for Ungal Veetu Pillai Title

ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள், "அடுத்த உங்க வீட்டுப் பிள்ளை நம்ம ஏகே தான்" என கமெண்ட்ஸ் போட்டு இன்னும் உசுப்பேற்றி வருகின்றனர். ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரை அடிக்கடி கலாய்த்து வரும் ப்ளூ சட்டை, அஜித்தை அதிகம் சீண்டாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X