Blue Sattai: “விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன்... கட்சியின் பெயர் தவக்கழ” ஃபுல் பார்மில் ப்ளூ சட்டை!
சென்னை: விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில முன்னணி ஹீரோக்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகையால் சிவகார்த்திகேயன் உற்சாகமாகியுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். அதேபோல் விஜய்யின் அரசியல் கட்சி பெயரையும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.
ஃபுல் பார்மில் ப்ளூ சட்டை மாறன்
வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், தனது அரசியல் வருகையை அதிரடியாக அறிவித்தார் விஜய். அதன்படி விஜய்யின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள விஜய், அரசியல் தனது வேட்கை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல், ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தில் மட்டும் நடித்து முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளாராம் விஜய். இதனால் இனி விஜய்க்காக கதை எழுதிய இயக்குநர்கள் மற்ற ஹீரோக்களை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக அஜித், சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு ஜாக்பாட் அடிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகையை வைத்து சிவகார்த்திகேயனை கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "விஜய் நடிப்பதை நிறுத்திய பிறகு.. அவரது இடத்தை எங்கள் தலைவர் கைப்பற்றுவார் என CSK ரசிகர்கள் கூறி வருகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார். அதாவது விஜய்யின் மார்க்கெட்டை இனி சிவகார்த்திகேயன் கைப்பற்றிவிடுவார் என கூறியுள்ளார். ஏற்கனவே கிரிஞ்ச் சிவகார்த்திகேயனை சுருக்கமாக CSK என ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
அதேபோல், விஜய்யின் கட்சி பெயரை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்வதாகவும் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார். அதில், "கட்சியின் பெயரை சுருக்கி 'தவக்கழ' என தல ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்" என ப்ளூ சட்டை மாறனே பங்கம் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக விஜய் அரசியலுக்கு வருவதை ப்ளூ சட்டை மாறன் பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதில், "ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப் போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை. அந்த வகையில் அவர்களை விட இவர் எவ்வளவோ மேல். யாருக்கு எதிரான அரசியல் செய்வார்? என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம். இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும்" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











