Blue Sattai Maran: ப்ளூ சட்டை பெரியப்பா SAC.. இத விஜய்யே எதிர்பார்த்திருக்க மாட்டார்.. செம்ம பங்கம்

சென்னை: லியோ படத்தை விஜய்யின் அப்பா SAC ட்ரோல் செய்தது வைரலாகியிருந்தது. அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜையும் பங்கமாக கலாய்த்திருந்தார் SA சந்திரசேகர். இந்நிலையில், ப்ளூ சட்டை பெரியப்பா SAC என்ற கேப்ஷனுடன் லியோ படத்தை ட்ரோல் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ப்ளூ சட்டை பெரியப்பா SAC
விஜய்யின் லியோ திரைப்படம் கடந்தாண்டு அக்டோபரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என சொல்லப்பட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாதியில் கதை, திரைக்கதை சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran trolling Vijay in SAC voice... Video goes on trending

இந்நிலையில், தேசிங்கு ராஜா 2 படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், லியோ படத்தையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜையும் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இப்போதுள்ள இயக்குநர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை என கூறியிருந்தார். அதாவது, "சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்... உடனே இயக்குநருக்கு போன் போட்டு முதல் பாதில் அருமையாக இருக்கிறது என பாராட்டினேன். அதனை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அந்த இயக்குநர், இரண்டாம் பாதி நல்லா இல்லை என்றதும் அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார்."

"தகப்பனே தனது பிள்ளையை பலி கொடுக்க விரும்ப மாட்டார். கிறிஸ்துவ மதத்தில் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவில்லை என்றேன். உடனே அந்த இயக்குநர் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்... சாப்பிட்டு பேசுகிறேன் என சொல்லிவிட்டு எனது போனை கட் செய்துவிட்டார். அதன்பின் இப்போது வரை அந்த இயக்குநர் கால் பண்ணவில்லை. அந்தப் படம் வெளியான பின்னர் நான் சொன்ன அனைத்தையும் ரசிகர்கள் அப்படியே விமர்சித்தனர்... நல்ல வச்சு செஞ்சாங்க" என பேசியிருந்தார்.

விஜய்யின் அப்பா SAC லியோ படம் குறித்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பற்றியும் மறைமுகமாக பேசியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது ப்ளூ சட்டை மாறன் வெர்ஷனில் வைரலாகி வருகிறது. ப்ளூ சட்டை பெரியப்பா என்ற கேப்ஷனில் வைரலாகும் இந்த வீடியோவில், லியோ படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனத்தை கட் செய்து எஸ்.ஏ.சந்திரசேகரின் ட்ரோலுடன் எடிட் செய்துள்ளனர்.

அதேபோல் வீடியோவிலும் ப்ளூ சட்டை மாறன், எஸ்.ஏ சந்திரசேகரின் முகங்கள் மாறி மாறி வருவதும், விமர்சனம் முழுவதும் SAC-ன் குரலில் இருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X