Blue Sattai Maran: “லியோவுக்காக அமெரிக்க அதிபரிடம் பேச்சு... ரொம்ப அக்கிரமம்..” கதறும் ப்ளூ சட்டை!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
அதேபோல், ஒருசில நாடுகளில் லியோ ஐமேக்ஸ் ரிலீஸிலும் பிரச்சினை காணப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் லியோ ஐமேக்ஸ் ரிலீஸ் பற்றி ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

லியோவுக்காக அமெரிக்க அதிபரிடம் பேச்சு
விஜய்யின் லியோ திரைப்படம் நாளை ரிலீஸாகவிருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. பான் இந்தியா படமாக தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியாகும் லியோ, ஐமேக்ஸ் ஸ்க்ரீனிலும் திரையிடப்படவுள்ளது.
ஆனாலும் லியோ ரிலீஸில் அடுத்தடுத்து பல பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கின்றன. முதலில் லியோ ஆடியோ லான்ச் திடீரென கேன்சல் ஆனது. பின்னர் பொது இடங்களில் லியோ ட்ரெய்லர் வெளியிட அனுமதி கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா உட்பட சில நாடுகளில் லியோ ஐமேக்ஸ் ரிலீஸில் பிரச்சினை என சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனையடுத்து லியோ தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவித்தபடி காலை 9 மணிக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் லியோ ஐமேக்ஸில் ரிலீஸாவது பற்றி விஜய் ரசிகர்கள் டிவிட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினர். அப்போது, "லியோ படத்தின் ஐமேக்ஸ் ரிலீஸை தள்ளி வைக்க, அமெரிக்க அதிபரிடம் ஹாலிவுட் ஹீரோ லியானோ டி காப்ரியோ பேசியதாக" கூறினர். இந்த வீடியோ டிவிட்டரில் வைரலானது.
இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், விஜய் ரசிகர்களை பங்கமாக கலாய்த்துள்ளார். அதாவது "ஜெயிலர் படத்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ பாத்தாருன்னு சொன்னதை கூட பொறுத்துக்கலாம். இது ரொம்ப அக்கிரமம்டா..!!" என ட்வீட் செய்துள்ளார். அதாவது ரஜினியின் ஜெயிலர் படத்தை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பார்த்ததாக தலைவரின் ரசிகர்கள் உருட்டி வந்தனர்.

ஆனால், விஜய் ரசிகர்கள் இப்போது அதனையே ஓவர்டேக் செய்துவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவில் கமெண்ட்ஸ் செய்து வரும் நெட்டிசன்கள், "2கே கிட்ஸ் தலைல அடிபட்ட மாதிரி தான் இருப்பானுங்க" என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











