Blue Sattai Maran: “இன்னொரு ராட்சச சைஸ் வடை..” நன்றி சொன்ன பார்த்திபன்.. வம்பிழுத்த ப்ளூ சட்டை!

சென்னை: இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற 'மாயவா தூயவா' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேசிய விருது கிடைக்க காரணமான ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி கூறியிருந்தார் பார்த்திபன்.

அதுமட்டும் இல்லாமல் 120 சர்வதேச விருதுகளை விட, நம் தேசிய விருது பெருமைக்குரியது என்றிருந்தார். இதனையடுத்து மீண்டும் பாயிண்டை பிடித்த ப்ளூ சட்டை மாறன், பார்த்திபனுக்கு கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்துள்ளார்.

 Blue Sattai Maran: Blue Sattai Maran Trolls again Parthiban for Iravin Nizhal awards

பார்த்திபன் இன்னொரு ராட்சச சைஸ் வடை: திரைப்படங்களுக்கான 69வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. தமிழில் ஜெய்பீம், சர்பட்டா பரம்பரை, கர்ணன், இரவின் நிழல் ஆகிய படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்குக் கூட விருது அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் இரவின் நிழல் படத்தின் 'மாயவா தூயவா' பாடலுக்காக ஸ்ரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வென்றார்.

பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவான இரவின் நிழல், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்ததும் சர்வதேச அளவில் கவனம் சேர்த்தது. இரவின் நிழல் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஏஆர் ரஹ்மானும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், 'மாயவா தூயவா' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பார்த்திபன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதாவது, "இரவின் நிழல் படத்தின் 'மாயவா தூயவா' பாடலுக்கு தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இதற்கு முழு காரணமாக இருந்த ஏஆர் ரஹ்மானுக்கு நன்றி. இரவின் நிழல் இதுவரை 120 சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும், நம் தேசிய விருது பெருமைக்குரியது" எனக் கூறியிருந்தார்.

இதனை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்துள்ளார். இரவின் நிழல் படம் வெளியானபோதே, இது உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை என்று ஆதாரத்துடன் அடித்து துவம்சம் செய்திருந்தார் ப்ளூ சட்டை. அதேபோல், இரவின் நிழல் படத்துக்கு 120 சர்வதேச விருதுகள் கிடைத்ததாக பார்த்திபன் கூறியதையும் ட்ரோல் செய்து வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் பார்த்திபனை பங்கமாக வச்சு செய்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "கோடம்பாக்கத்தின் இன்னொரு ராட்சச சைஸ் வடை: 120 சர்வதேச விருதுகள்!!!
இந்த 120 விருதுகளையும் மீடியா முன்பு வைத்து உண்மையை நிரூபிக்க முடியுமா? ஆன்லைன் சான்றிதழ்கள் எத்தனை? நேரில் தரப்பட்ட விருதுகள் எத்தனை?
ஒருவேளை இது உண்மையாகவே இருந்தாலும் (வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை).. இவற்றுள் பெரும்பாலானவை திடீரென்று உருவாக்கப்பட்ட உப்மா வெப்சைட் மற்றும் உப்மா அமைப்புகள் தந்தவைதானே?
இந்த கேள்விக்கு நாம் பலமுறை பதில் கேட்டும் இதுவரை பதில் வரவே இல்லை.
அப்படியென்றால் ஒட்டுமொத்த தமிழர்கள் மற்றும் ஊடகத்தினரை பட்டப்பகலில் ஏமாற்றுவதாக எடுத்துக் கொள்ளலாமா?
படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது. இதற்கான ஆதாரங்களை இன்றுவரை இவரிடம் ஒரு பத்திரிகை அல்லது ஊடகம் கூட ஏன் கேட்கவில்லை?
இதோ நான் மீண்டும் கேட்டுள்ளேன். 120 விருது வாங்கியதற்கான மொத்த ஆதாரங்களுடன் ப்ரெஸ் மீட் கூட்டி நிரூபிக்க முடியுமா சார்?
நிலைமையை சமாளிக்க அவசர அவசரமாக போட்டோஷாப் பட்டியல் ரெடியாகுமா அல்லது இரண்டாம் ஆண்டை நோக்கி இந்த பலத்த மௌனம் பயணிக்குமா?
வாய்ல புண்ணா? மௌன விரதமா?" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறனின் கேள்விகள் நியாயமானது தான். பார்த்திபன் விருதுகளின் பட்டியலை வெளியிடலாமே என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X