Blue Sattai Maran Rudhran Review: ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தை மரண கலாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தை மரண கலாய் கலாய்த்து விமர்சனம் கொடுத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
கடைசியாக சிம்புவின் பத்து தல படத்தை கடுமையாக விமர்சித்திருந்த ப்ளூ சட்டை மாறனுக்கு இந்த வாரம் வகையா பல படங்கள் சிக்கி உள்ளன.
அதில், முதல் சம்பவமாக ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படத்தை துவைத்து தொங்க விட்டுள்ளார்.

ருத்ரன் விமர்சனம்: ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக காஞ்சனா 3 வெளியானது. காஞ்சனா முதல் மற்றும் இரண்டாம் பாகம் பெற்ற வெற்றியை 3ம் பாகம் விமர்சன ரீதியாக பெறவில்லை என்றாலும், வசூலில் இந்த படமும் நல்ல வெற்றியை பதிவு செய்ததாகவே தகவல்கள் வெளியாகின.
ஆனால், அதன் பின்னர் 3 ஆண்டுகளுக்கு மேலாக ராகவா லாரன்ஸ் படம் எதுவுமே வெளியாகாத நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி ருத்ரன் படம் வெளியானது. இந்த படம் ஆக்ஷன் படமா? அல்லது ஹாரர் படமா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், இது படமா? அல்லது வெறும் மசாலா மட்டும் தானா என விமர்சகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் மரண கலாய்: மொக்கையாக படத்தை எடுத்து விட்டு திடீரென ஒரு மெசேஜ் சொல்றேன்னு கொலையா கொல்வானுங்களே.. அப்படியொரு படம் தான் இந்த ருத்ரன் என ஆரம்பத்திலேயே படத்தை மரண கலாய் கலாய்த்துள்ளார்.
அப்பா அம்மாவை வெளிநாட்டுக்கு வேலைக்குப் போறேன்னு சொல்லிவிட்டு தனியா தவிக்க விட்டுடாதீங்க என்கிற தத்துவத்தை எல்லாம் சொல்வது இருக்கட்டும். முதலில் நீங்க எடுத்த படத்தை நீங்களே போட்டுப் பார்த்தீங்களா இல்லையா? எனக் கேட்டுள்ளார்.
பாலய்யா கிட்ட பர்மிஷன் வாங்குனீங்களா: மேலும், இஷ்டத்துக்கு எதிரிகளை பந்தாடும் ஆக்ஷன் காட்சிகளை வைத்துள்ளீர்களே, இதுக்காக தெலுங்கு நடிகர் பாலய்யாவிடம் பர்மிஷன் வங்குனீங்களா? அவர் படத்துல தான் இப்படி நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் இருக்கும். இப்போ ராகவா லாரன்ஸ் படத்திலும் இப்படி சண்டைக் காட்சிகள் இருக்கே முடியலைப்பா என வறுத்து எடுத்துள்ளார்.

இதுல பார்ட் 2 வேறயா: விடுதலை படத்தின் கிளைமேக்ஸில் பார்ட் 2 படத்துக்கான லீடு வைத்திருப்பார்கள். அதை பார்த்த ரசிகர்கள் அடுத்த பாகத்தை பார்க்க ஆர்வமுடன் அந்த காட்சிகளை கண்டு ரசித்தனர்.
ஆனால், ருத்ரன் படத்தின் முதல் காட்சியில் இருந்து முடியும் வரை பாடாய் படுத்தி எடுத்து விட்டு, கடைசியில் பார்ட் 2வுக்கும் ஒரு லீடு வச்சிருக்காங்க பாரு, அய்யோ சாமி இன்னொரு பார்ட்டா என தியேட்டரை விட்டே ரசிகர்கள் தெறித்து ஓடி விட்டார்கள் என தனது விமர்சனத்தில் ருத்ரன் படத்திற்கு மொத்தமாகவே நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அந்த அளவுக்கு எல்லாம் மோசமாக இல்லை, கமர்ஷியல் ரசிகர்களுக்கான படம் தான் இது, பார்க்கலாம். கண்டிப்பா என் டர்டெயின் பண்ணும் என ரசிகர்கள் கீழே கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications