ஜெயிலர் அதிகாரப்பூர்வ வசூலே நம்ப மாட்டேன்.. நானும் வடை சுட போறேன்.. ப்ளூ சட்டை மாறனின் புது ரூட்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 525 கோடி ரூபாயை அதிகாரப்பூர்வமாக வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்தே ப்ளூ சட்டை மாறன் கடும் அப்செட் ஆகிவிட்டார் போல தெரிகிறது.
அதற்காக தனியாக ஒரு கருத்துக் கணிப்பு (poll) நடத்தி டிராக்கர்கள் சொல்லும் வசூல் கணக்கை நம்புவீர்களா, தயாரிப்பு நிறுவனம் சொல்வதும் வடை தானா, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவித்தல் தான் சரியான வசூல் என நினைக்கிறீர்களா? என்கிற கருத்துக் கணிப்பை நடத்தினார்.

அதன் ரிசல்ட், ரசிகர்கள் டிரார்க்கர்களும், தயாரிப்பாளர்களுமே சொல்வது பொய்யான வசூல் கணக்கு என புதிய ட்வீட்டை போட்டு இனிமேல் தானும் பொய்யான வடை வசூலை சொல்லப் போகிறேன் என கடைசியில் ட்விஸ்ட் வைத்து விட்டார்.
மூச்சுப்பிடிச்சு கத்தினது எல்லாம்: இதுவரை மற்ற சோஷியல் மீடியா டிராக்கர்கள் சொல்வதை எல்லாம் வடை என்றும் வடை மெஷின் என்றும் கலாய்த்து வந்த ப்ளூ சட்டை மாறன் அவங்க அப்படி சொல்லி சொல்லியே பாப்புலராகி நல்லா சம்பாதிக்கிறாங்க என்பதை கண்டுபிடித்து, தற்போது தானும் அதே போல வடை சுடப் போகிறேன் என்றே அறிவித்து அவரது ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், பிரபலங்கள் என பலரிடமும் தொடர்ந்து சண்டை போட்டு வந்த ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலால் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் போல என நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.
நானும் வடை சுட போறேன்: சன் பிக்சர்ஸ் ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்த நிலையில், அதுவும் பொய்யான வசூல் தான் என அடம்பிடித்துக் கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன் புதிதாக UBOX - Unofficial Box Office Report என்பதை தானும் சொல்லப் போவதாக புது ரூட் ஒன்றை பிடித்துள்ளார்.

திட்டும் ரசிகர்கள்: பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் என்கிற போர்வையில், இஷ்டத்துக்கு உருட்டி வருபவர்களை ப்ளூ சட்டை மாறனாவது போல்டாக கேட்கிறாரே என நம்பி அவருக்கு ஃபாலோயர் ஆன சில ரசிகர்களும், இவரது இந்த ட்வீட்டை பார்த்து, இதுக்குத்தான் ஒரு மாசமா உருட்டிட்டு இருந்தியான்னு கேவலமாக திட்டி வருகின்றனர்.
கடைசியில், ப்ளூ சட்டை மாறனாலே தாக்கு பிடிக்க முடியாமல், அந்த பக்கமே சாய்ந்து விட்டாரே என்றும் அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். விஜய்யின் லியோ படத்துக்கு பொய்யான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் சொல்லப்போறீங்க அப்படித்தானே என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











