எல்லாமே வடை மெஷின்.. ஜெயிலர் 350 கோடி வசூலா.. மனோபாலாவை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே அந்த படத்திற்கு நெகட்டிவிட்டி பரப்பி வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது அந்த படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகளை பதிவிட்டு வரும் டிராக்கர்களையும் சக யூடியூப் சினிமா விமர்சகர்களையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளார்.
யூடியூபில் புதிய படங்கள் ரிலீஸ் ஆனாலே அதை பற்றிய கருத்துக்களையும் விவாதங்களையும் நடத்தி வரும் செய்யாறு பாலு, மனோபாலா விஜயபாலன் உள்ளிட்டவரை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணியத்தையும் வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தின் 350 கோடி வசூல் குறித்த ட்வீட்டிற்கு மனோபாலாவை மனசாட்சியே இல்லாமல் வாட்டி வதைத்துள்ளார்.
ஜெயிலர் 350 கோடி வசூல்: கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை மக்கள் மத்தியில் அள்ளி உள்ள நிலையில், 5 நாட்களில் இதுவரை 350 கோடி வசூலை கடந்து விட்டதாக மனோபாலா விஜயபாலன் நேற்று அதிரடியாக பாக்ஸ் ஆபிஸ் தகவலை வெளியிட்டு இருந்தார்.

வடை மெஷின்: உடனடியாக உள்ளே புகுந்த ப்ளூ சட்டை மாறன் வடை மெஷின் வீடியோவை அவரது ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு வறுத்தெடுத்துள்ளார். ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸே இன்னமும் தைரியமாக சொல்லவில்லை. நீ ஏன் இப்படி தினமும் வடை சுடுற எனக் கேட்டு விளாசி உள்ளார்.
மேலும், தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் பெரிய வசூலை எல்லாம் செய்யவில்லை என்றே ப்ளூ சட்டை மாறன் தனது ட்வீட்கள் மூலம் பதிவிட்டு வருகிறார்.
திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்: ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களை வம்பிழுத்து வரும் நிலையில், அவரது கமெண்ட்டுக்கு கீழ் பலரும் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். மெகா சீரியல் என வாரிசு படத்தை கலாய்க்கும் போது ப்ளூ சட்டை மாறனை திட்டி வந்த விஜய் ரசிகர்கள் தற்போது ரஜினியை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து வர அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











